கணனிகளை நேரடி வைரஸ்கள் மற்றும் இணைய வைரஸ்களிலிருந்து பாதுகாப்பை தரும் சிறந்த மென்பொருட்களின் ஒன்றான Kaspersky Anti Virus வடிவமைப்பு நிறுவனமான Kaspersky ஐ இலுள்ள தரவுகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது.

ரஷ்யாவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்திலேயே ஹேக்கர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

இந் நிறுவனமானது வைரஸ் தாக்கங்கள் தவிர ஹேக்கர்களிடமிருந்து தனி நபர்களின் சொப்பிங் கார்ட் மற்றும் கிரடிட் கார்ட்களை பாதுகாக்கும் சேவையையும் வழங்கி வந்த நிலையில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நிறுவனத்தின மீதான மக்களின் நம்பிக்கை எதிர்காலத்தில் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இது பற்றி கருத்து தெரிவித்த Kaspersky நிறுவனத்தின தலைமை அதிகாரி Eugene Kaspersky “ மூன்று வகையான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஹேக்ஹிங் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும், சைபர் பாதுகாப்புக்களை வழங்கும் நிறுவனங்களின் மீதான உளவுத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.








0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top