டிவிட்டரில் கணக்கை பயன்படுத்தாத போது தவற விட்ட முக்கிய டிவிட்டுகளை பார்ப்பதற்கு டிவிட்டர் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

டிவிட்டரில் ஒரு நாளில் 50 கோடிக்கும் அதிகமான டிவிட்டுகள் பகிரப்படுகின்றன. தற்போது டிவிட்டரில் நாம் ஆன்லைனில் இருக்கும் போது நாம் பின் தொடர்பவர்கள் செய்த டிவிட்டுகளை மட்டுமே படிக்க முடியும்.

பழைய டிவிட்டுகளை படிக்க வேண்டுமானால் நம்மை பின் தொடர்பவர்களின் பக்கத்திற்கு நேரடியாக சென்று படிக்க வேண்டும்.

'வைல் யு ஆர் அவே' (while you are away) என இதற்கு பெயரிடப்பட்டிருக்கும் புதிய அம்சம் மூலம் பயனர்கள் ஆன்லைனில் இல்லாத சமயத்தில், அவர் பின் தொடர்பவர்கள் பகிர்ந்த முக்கியமான டிவிட்டுகளின் தொகுப்பை, அடுத்த முறை அவர் ஆன்லைனில் வரும்போது ஒரு தொகுப்பாக வழங்கப்படும்.

இந்த வசதியை ட்விட்டர் வழங்கியுள்ளது. இந்த முறை மூலம் நேரம் மிச்சப்படுவதுடன், முக்கியமான டிவிட்டுகள் கவனிக்கப்படாமல் போவதையும் தடுக்க முடியும்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top