குறிப்பாக, 2013 துவக்கத்தில் வெளிவந்த பிளாக்பெர்ரியின் 10 வரிசையிலான ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் பாப்புலரான ஆப்ஸ்கள் இல்லாத காரணத்தினால் ஆன்ராய்டு மற்றும் ஆப்பிளுடன் போட்டியை சமாளிக்க முடியாமல் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள பிளாக்பெர்ரி விரைவில் முதல்முறையாக ஆன்ட்ராய்டு மொபைலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் நடந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிளாக்பெர்ரி நிறுவனம் தகவலை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில், அடுத்து வெளிவர உள்ள பிளாக்பெர்ரி ஹேண்ட்செட்டுகள் டச் ஸ்கீரீன் மற்றும் பிஸிக்கல் கீ போர்டுடன் இணைந்த ஸ்லைடு மாடலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை ஹேண்ட்செட்டுகள் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்க அதிக வாய்ப்பு உள்ளது.
0 comments Blogger 0 Facebook
Post a Comment