“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது பழமொழி. இனி, “வயதின் அளவும் முகத்தில் தெரியும்” என்பது மைக்ரோசாப்ட்டின், ஹவ்-ஓல்ட் தளத்திற்கான புது மொழி. ‘மைக்ரோசாப்ட் பில்ட் 2015′ (Microsoft Build 2015) நிகழ்வை கொண்டாடிவரும் அந்நிறுவனம், நித்தமும் தங்களின் ஆய்வுகள் மற்றும் தயாரிப்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

அந்த வரிசையில் மைக்ரோசாப்ட்டின் புதிய வரவு ‘ஹவ்-ஓல்ட்’ (How-Old) வலைத்தளம். இந்த வலைத்தளத்தில், நீங்கள் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்த சில நொடிகளில் வயது என்ன என்பதை இந்த தளம் தெரிவித்துவிடும். ‘ப்ராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட்’ (Project Oxford) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே, மைக்ரோசாப்ட் இந்த வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.
how-old-e1430502315530
இந்த வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே இணையவாசிகளிடம், எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிட்ட அந்த திட்டத்தின், முழு பணிகளே நிறைவடையாத நிலையில், பயனர்கள் கொடுத்த வரவேற்பு மைக்ரோசாப்ட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நீங்களும் உங்கள் புகைப்படத்தைக் கொண்டு, உங்கள் வயதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், கீழே உள்ள இணையத் தொடர்பைத் தொடரலாம்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top