windows_10_0மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது.
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘இக்னைட்’ (Ignite) தொழில் நுட்ப மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெர்ரி நிக்சன், “தற்போது நாங்கள் விண்டோஸ் 10-ஐ வெளியிடுகிறோம். இதுதான் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி பதிப்பு(last version). இதற்கடுத்து எந்த இயங்குதளமும் வெளிவராது. இதனால், விண்டோஸ் 10-க்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இதனால் மைக்ரோசாப்ட் இனி இயங்குதளங்களையே வெளியிடாதா? என்று மாநாட்டுக்கு வந்திருந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பரபரக்க ”கடந்த வருடம் விண்டோஸ் 8.1-ஐ வெளியிடும் போது விண்டோஸ் 10-க்கான வேலையை ரகசியமாக செய்து வந்தோம். தற்போது விண்டோஸ் 10 க்கு அடுத்து புதுப்புது பதிப்புகளை வெளியிடாமல் விண்டோஸ் 10 இயங்குதளத்தையே தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றபடி அப்டேட் செய்ய இருக்கிறோம்” என்று கூறி அனைவரையும் ஆசுவாசப்படுத்தியுள்ளார் ஜெர்ரி நிக்சன்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top