சம்சுங் நிறுவனம் கைப்பேசி சந்தையில் நல்ல இடத்தை பெறுவதற்கு தொடர்ச்சியாக பல்வேறு ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் Samsung Galaxy S6 அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் Samsung Galaxy J5 எனும் மற்றுமொரு கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.









0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top