நண்பர்களுக்கு செய்திகளை அனுப்ப உதவும் வாட்ஸ்அப் மொபைல் அப்ளிகேசனை 19 பில்லியன்  டாலர் விலை கொடுத்து  வாங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
facebook-whatsapp
மொபைலில் மெசேஜ் அனுப்புவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுவது Whatsapp அப்ளிகேசன் ஆகும். iPhone, BlackBerry, Android, Windows Phone, Nokia என்று அனைத்து மொபைல்களிலும் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப் அப்ளிகேசனுக்கு 450 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர்.
இந்த 19 பில்லியனில் 4 பில்லியன் பணமாகவும், 12 பில்லியன் பேஸ்புக் பங்குகளாகவும், 3 பில்லியன் ஊழியர்களுக்கான பங்கு தொகையாகவும் கொடுக்கவுள்ளது பேஸ்புக்.
வாட்ஸ்அப்பை வாங்கினாலும் அதனை பேஸ்புக் மெஸ்சஞ்சர் அப்ளிகேசனுடன் இணைக்காமல் தனியாகவே தொடரும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top