கூகுள் நிறுவனம் மால்வேரிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும் வசதியுடன்  கூகுள் க்ரோம் 32-ஆம் பதிப்பை வெளியிட்டுள்ளது.
நீங்கள் ஏற்கனவே கூகுள் க்ரோம் உலவியை நிறுவியிருந்தால் About பகுதிக்கு சென்றால் தானாக அப்டேட் ஆகும். இல்லையென்றால் google.com/chrome என்ற முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
கூகுள் க்ரோம் 32 புதிய வசதிகள்
Tab Indicator:
google chrome 32
நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் ஆடியோ, வெப்கேம் ஆகியவைகள் செயல்பட்டாலோ, உங்கள் கணினியை டிவியில் தொடர்புபடுத்தியிருந்தாலோ அதன் குறியீட்டை tab-ல் தெரிந்துக் கொள்ளலாம்.
Malware பாதுகாப்பு:
malware notification
நீங்கள் இணையத்தில் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது மால்வேர் கோப்பு இருந்தால் அது பற்றி தானாகவே அறிவிப்பு செய்யும். Dismiss என்பதை க்ளிக் செய்து  மால்வேரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர்களுக்கான மேற்பார்வை:
google users
கூகுள் கிறோம் ப்ரவ்சரில் தனித்தனியாக பல கணக்குகள் உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு கணக்கிற்கும் அவர்கள் எந்தெந்த தளங்களை பார்க்கலாம் என்று அனுமதி கொடுக்கலாம். மேலும் அவர்கள் எந்தெந்த தளங்களை பார்த்தார்கள் எனவும் கண்காணிக்கலாம்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top