image 
கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.

உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக்கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ரோய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிகேஷனில் இடம்பெற்றுள்ளது.தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும்.ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து உள்ளீடு அப்ளிகேஷனை ஆண்ட்ரோய்ட் பயனாளிகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்தவுடன் வாட்ஸ் அப் அல்லது மற்ற மெசேஜிங் அப்ளிகேஷன்களில் விரலால் எழுதி அனுப்பும் கீ பேடை செயல்படுத்த முடியும்.எழுத்துக்களை ஸடைலஸ் எனப்படும் எழுத்தாணியுடனும் அல்லது வெறும் விரல்களாலும் எழுத முடியும்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top