இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை என அனைவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது ஸ்மார்ட் போன்கள்.

இதை எந்நேரமும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால், அருகில் இருப்பவர்களிடம் மனம்விட்டு பேசுவது கூட குறைந்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல் மன அழுத்தம் அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கேத்தரின் ஸ்டீனர் ஸ்மார்ட் உள்ளிட்ட உளவியல் வல்லுநர்கள் போன் மோகத்தின் பாதிப்பைக் குறைப்பதற்கான வழிகளைத் தெரிவித்துள்ளனர்.

* ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்கு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

* ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் பகுதியை உருவாக்குங்கள்.

* போனைப் பயன்படுத்தும் நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிடுங்கள்.

* அருகிலேயே நோட்டு ஒன்றை வைத்திருந்து செய்ய வேண்டியவற்றைக் குறித்து வையுங்கள்.

* ஸ்மார்ட் போன் நேரத்தைக் கட்டுப்படுத்தும் செயலிகளைப் பயன்படுத்துங்கள்

* சிறிது நேரம் போன் இல்லாமல் இருக்கவும் பழகுங்கள்.





0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top