ஒரு தொலைபேசி சேவை வழங்குனரின் Dongle ஒன்றை வாங்கும் போது அதில் உள்ள பிரதான சிக்கல்களில் ஒன்று அவற்றில் வேறு நெட்வேர்க் சிம்பாவிப்பது முடியாத காரியம். அதற்கு அதனை அன்லாக் செய்ய வேண்டும்.ஆனால் அப்படி செய்யாமல் வேறு நெட்வேர்க் சிம் பாவித்து இணைய இணைப்பை மேற்கொள்ள ஒரு வழி இருக்கிறது...

இதற்கு தேவையான ஒரு மென்பொருள் அனைவரும் அறிந்த Nokia PC Suite ஆகும். இதை வைத்து என்ன செய்வது என்று யோசனை வருகிறதா? கீழே கூறப்பட்ட வழிகளை பின்பற்றவும்.


1.உங்கள் Dongle கணணியில் இணைக்கவும்

2.உங்கள் Dongle க்கான மென்பொருள் தானகவே செயற்பட தொடங்கி Invalid SIM என்ற ஒரு பிழை செய்தி வரும். அதனை பொருட்படுத்தாது அந்த மென்பொருளை மூடவும்.

3.இப்போது Nokia PC Suite மென்பொருளை திறக்கவும். அதில் சென்று File > Connect To Internet என்பதை தெரிவு செய்யவும்

4.இப்போது Settings சென்று உங்கள் புதிய இணைய சேவை வழங்குனருக்கான Configuration செய்யவும்.

5. APN (access Point Name) என்பதில் உங்கள் சேவை வழங்குனரின் APN கொடுக்கவும். தெரியவில்லை என்றால் Google உதவியை நாடவும்.

5. இப்போது Connect செய்து இணையத்தில் நுழையுங்கள்






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top