அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக உருவாக்கிய iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9 விரைவில் வெளியிடப்படவுள்ளதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகிருந்தன.இந்நிலையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள Worldwide Developer Conference நிகழ்வில் இந்த இயங்குதளம் அறிமுகம் செய்யப்படும் என உத்தியோகபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மின்கலப் பாவனையை அதிகரித்தல், அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு வசதிகள் என்பன உட்பட மேம்படுத்தப்பட்ட Siri சேவை போன்ற பல புதிய வசதிகளை உள்ளடக்கியதாக இவ் இயங்குதளம் வெளிவரவுள்ளது.

இதேவேளை இவ் இயங்குதளமானது iPhone 4 இற்கு பின்னரான சாதனங்களில் செயல்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top