கணனியை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் Ccleaner-ன் புதிய பதிப்பு அறிமுகமாகி உள்ளது.

கணனியில் தங்கும் தேவையற்ற கோப்புகளை அழிப்பது, ரெஜிஸ்ட்ரியில் நீக்காமல் விடப்படும் குறியீடுகளை நீக்குவது, பயனற்ற குக்கீஸ் கோப்புகளை ஒழிப்பது போன்ற பல பணிகளுக்கு பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் மென்பொருள் தான் சிகிளீனர்.
இதன் புதிய பதிப்பு Ccleaner- v4.07.4369 அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த பதிப்பு விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழைய விண்டோஸ் சிஸ்டத்தின் போல்டர்களை நீக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் History Files-களை நீக்குவதில் புதிய முறை தரப்பட்டுள்ளது.
இதேபோல பல புதிய புரோகிராம்களுக்கான வசதிகளுடன், சில சிறிய தவறுகளும் சரி செய்யப்பட்டுள்ளதாக, இதனைத் தயாரித்து வழங்கும் பிரிபார்ம் நிறுவனம் அறிவித்துள்ளது.










0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top