அமெரிக்காவை விட இலங்கையில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இங்கு சராசரியாக தினமும் 3.18 மணி நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர். அதுபோல், ஸ்மார்ட்போன் மூலம் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் ஆண்டுக்கு 25 சதவீதம் என அதிகரித்து வருகிறது. அதேநேரம், இந்த போன்களை குறிவைத்து வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன.இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தகுந்த வைரஸ் பாதுகாப்பு சாப்ட்வேர் பயன்படுத்தி இதை தடுக்க வேண்டும். பொது இடங்களில் உள்ள இலவச வை-பைகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும். தகவல்களை அழியாமல் தடுக்க அதை கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கலாம் என சிஇஆர்டி அறிவுறுத்தியுள்ளது.
முன்னெல்லாம் க்ம்பூட்டர் அல்லது டெப்லெட்டுகளில் மட்டுமே உலவி வந்த்து போல் தற்போது ஆன்டிராய்டு போன்களில் சேமித்து வைத்துள்ள தகவல்களை திருடி, அதேபோனில் உள்ள தொடர்பு எண்களுக்கு தானாக எஸ்எம்எஸ் அனுப்பும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டிராஜான் குடும்பத்தை சேர்ந்த இந்த வைரஸ் போன் இருக்கும் இடம், அதில் சேமித்துள்ள படங்கள், பாஸ்வேர்டுகள், குறுந்தகவல்கள், ஐஎம்இஐ எண் உள்ளிட்டவற்றை திருடி அனுப்புவது மட்டுமின்றி, போனின் மொத்த இயக்கத்துக்கும் இதுவேட்டுவைத்துவிடும் என்று சிஇஆர்டி என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஸ்மார்ட் போன்களில் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டு, ரகசிய தகவல்கள் சேமித்து வைத்திருப்போர் உஷாராக இருக்க வேண்டும். இந்த பிரச்னையை தவிர்க்க நம்பகத்தன்மை இல்லாத இணையதளங்களில் இருந்து அப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
இன்டர்நெட் பேங்கிங் உட்பட பல்வேறு பண பரிவர்த்தனைகள் ஸ்மார்ட் போன் மூலமே மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இந்த தகவல் ஆண்டிராய்டு போன்கள் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments Blogger 0 Facebook
Post a Comment