தேடியந்திரம் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது கூகுள்தான். அதிகம் அறியப்பட்ட தேடியந்திரமாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் தேடியந்திரமாகவும் கூகுள்தான் இருக்கிறது.இணையத்தில் தகவல் தேவையா? கூகுளில் தேடு! இணையத்தை பயன்படுத்த வேண்டுமா? கூகுளில் தேடு! கூகுள் பற்றியே ஒரு சந்தேகமா? அதையும் கூகுளில் தேடு!

tec may 30

இப்படி, எல்லாவற்றுக்கும் கூகுளை நாடுவது இயல்பாக இருக்கிறது. கூகுளும் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை. நாடி வருபவர் தேடும் தகவலை அது கச்சிதமாகவே முன்வைக்கிறது.இதே கூகுள் நிறுவனம் பல சேவைகளை வழங்கி வந்தாலும் தேடல் எந்திரம்தான் (Search Engine) அவர்களின் அடிப்படை. யாகூ, பிங் என தேடல் எந்திரங்கள் போட்டி போட்டாலும் கூகிளை அசைக்க முடியவில்லை.

இதனிடையே பேஸ்புக் தேடல் எந்திரம் துவக்கலாம் என்பது நீண்ட காலமாக வதந்தியாகவே இருக்கிறது. இப்போது அந்த வதந்திக்கு வலு சேர்க்கும் மற்றொரு தகவல். பேஸ்புக் சில IOS (Apple IPhone) பயனர்களுக்கு, Status, Photo/Video போடுவது போன்று “Add Link” என புதியதொரு வசதியை சோதனை முயற்சியாக வழங்கி உள்ளது.
இந்த வசதி மூலம் பயனர்கள் பேஸ்புக் உள்ளேயே வேண்டியவற்றை தேடி முடிவுகளை நாம் இடும் ஸ்டேடஸ்-களில் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதி அமெரிக்காவில் உள்ள சில பயனர்களுக்கு மட்டும் சோதனைக்காக வழங்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் படிப்படியாக எனைவருக்கும் வழங்கப்படும் எனவும் பேஸ்புக் அறிவித்து உள்ளது.
தேடல் முடிவுகளை தங்களிடம் பகிரப்பட்டு (Share) உள்ள 1 டிரில்லியன் பக்கங்களில் இருந்து வழங்குவதாக கூறி உள்ளனர். இது பேஸ்புக் தேடல் எந்திரத்திற்கான முன்னோட்டமா? என இணைய வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.கூகுள் தேடல் எந்திரம் நிரலிகளால் தானியங்கியாக செயல்படுவது. பேஸ்புக் தேடல் எந்திரம் அளித்தால் தங்களிடம் ஷேர் செய்யப்பட்ட, லைக் செய்யப்பட்ட இணைய பக்கங்களில் இருந்து முடிவை காட்டுவார்கள். அது கூகிளை விட மேம்பட்டதாக, துல்லியமானதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இதனிடையே கூகிள் நிறுவனம் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை சேமித்து வைப்பதற்கான தளத்தை உருவாக்கியுள்ளது. கூகிள் போட்டோஸ் (http://photos.google.com) எனப்படும் இந்த சேவையை கடந்த வியாழக்கிழமை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்கனவே கூகிள் பிகாசா எனும் புகைப்படம் சேமிக்கும் சேவையை நடத்தியது நினைவிருக்கலாம். அதை மூடி விட்டு தற்போது கூகிள் போட்டோஸ் எனும் சேவையை துவக்கி இருக்கிறது.
இந்த தளத்தில் http://photos.google.com அனைத்து பயனர்களும் இலவசமாக அன்லிமிடெட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சேமித்து வைக்கலாம். 16MP வரை போட்டாக்கள் மற்றும் 1080p வரை வீடியோக்களை சேமிக்கலாம். இந்த சேவையின் ஆப் ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிள் சாதனத்தின் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top