சார்ஜர் மற்றும் வெளிப்புற மின்சார உபகரணங்கள் ஏதுமின்றி தானாகவே ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் செய்துகொள்ளும் புதிய நவீன ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஸ்மார்ட்போன்களிலிருந்து வெளியாகும் ரேடியோ பிரிக்வென்ஸியை அப்படியே மின்சாரமாக மாற்றி பேட்டரியில் சேமித்துக் கொள்கிறது இந்த புதிய தொழில்நுட்பம்.
charger may 9

பொதுவாக, செல்போன் சிக்னல்களை ஈர்க்கும் போதுதான் ஸ்மோர்ட்போன்களின் 90 சதவீத மின்சாரம் வீணாகிறது. புதிய தொழில்நுட்பத்தில் இதையே மின்சாரமாக மாற்றுவதால் வழக்கமாக இயங்குவதை விட 30 சதவீதம் கூடுதலாக ஸ்மார்ட்போன்களில் மின்சாரம் தாக்கு பிடிக்குமாம்.

அமெரிக்காவை சேர்ந்த நிகோலா லேப்ஸ் இந்த புதிய தொழில்நுட்பத்தை ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்த ஓராண்டிற்குள் சந்தையில் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தை செல்போன்கள் மட்டுமின்றி, கைகளில் அணியும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளிலும், சென்சார்கள் கொண்ட மருத்துவ உபகரணங்களிலும் கூட பயன்படுத்த முடியுமாம்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top