கடந்த பகுதியில் புதிய ப்ளாக் உருவாக்குவது பற்றி பார்த்தோம் அல்லவா? தற்போது புதிய பதிவு எழுதுவது பற்றியும், அதில் உள்ள வசதிகள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.
[படங்களை பெரிதாகக் காண படத்தின் மேல் சொடுக்கவும்.]
ப்ளாக்கர் Dashboard பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய ப்ளாக் பின்வருமாறு காட்சி அளிக்கும்.
அதில் Start Blogging என்பதனை க்ளிக் செய்தால் புதிய பதிவு எழுதுவதற்கான பக்கம் பின்வருமாறு வரும்.
அந்த பக்கத்தில் மேலே உள்ள சிறிய பெட்டியில் பதிவிற்கான தலைப்பு கொடுக்க வேண்டும்.
அதற்கு கீழே உள்ள பெரிய பெட்டியில் நீங்கள் எழுத நினைக்கும் பதிவை எழுத வேண்டும்.
பதிவின் தலைப்புக்கு பக்கத்தில்
என்று நான்கு பட்டன்கள் இருக்கும்.

Publish - நீங்கள் பதிவை எழுதி முடித்தப் பின் அதனை பிரசுரிப்பதற்கு இதனை சொடுக்கவும்.
Save - நீங்கள் பதிவை எழுதி, பிறகு பிரசுரிக்கலாம் என்று நினைத்தாலோ, அல்லது பாதி பதிவை எழுதி மீதியை பிறகு எழுதலாம் என நினைத்தாலோ Save என்பதை சொடுக்கவும். அவ்வாறு சேமித்த பதிவுகள் Drafts எனப்படும்.
கவனிக்க: ப்ளாக்கரில் பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போது தானியங்கியாக நாம் எழுத எழுத சேமித்துக் கொள்ளும்.
Preview - நாம் எழுதும் பதிவை பிரசுரிப்பதற்கு முன்னால் அது பிரசுரித்தப் பின் எப்படி வரும் என்பதை முன்னோட்டம் பார்க்க இதனை சொடுக்கவும். இதன் மூலம் நம் பதிவில் எழுத்துப் பிழைகளோ அல்லது வேறு பிழைகளோ இருந்தால் சரி செய்துக் கொள்ளலாம்.
Close - பதிவெழுதும் பகுதியில் இருந்து வெளியேற இதனை சொடுக்கவும்.
பதிவின் தலைப்புக்கு கீழ் பின்வருமாறு இருக்கும்.
இவைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பதிவில் படத்தை இணைத்தப்பின் அதன் அளவை மாற்ற படத்தின் மேல் க்ளிக் செய்யுங்கள்.
அவ்வாறு க்ளிக் செய்தபின் அதில் Small, medium, Large, X-Large, Original Size இவற்றில் ஒன்றை தேர்வு செய்து அளவை மாற்றலாம். மேலும் Left, Center, Right இவற்றில் ஒன்றை தேர்வு செய்து இடது, நடு, வலது புறத்தில் படத்தை தெரிய வைக்கலாம்.
பதிவில் வீடியோக்களை இணைப்பது பற்றி விரிவாகக் காண ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி? என்ற பதிவை பார்க்கவும்.
Jump Break பற்றி அறிய வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி? என்ற பதிவை பார்க்கவும்.

இனி அதே பக்கத்தில் வலதுபுறம் உள்ள Post Settings பற்றி பார்ப்போம்.
Labels - நாம் எழுதும் பதிவிற்கு தொடர்புடைய குறிச்சொற்களை இங்கு எழுத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் Webdesign பற்றி கவிதை எழுதினால் "Technology", "Webdesign", "Web development" என்பது போன்று குறிச்சொற்களை கொடுக்கலாம்.
Schedule - நீங்கள் எழுதும் பதிவை எப்பொழுது பிரசுரிக்க வேண்டும் என்பதை இங்கு தேர்வு செய்யலாம். Default-ஆக இது Automatic என்று இருக்கும். நீங்கள் எப்பொழுது Publish பட்டனை க்ளிக் செய்கிறீர்களோ, அப்பொழுது பிரசுரமாகும். இல்லையென்றால் Set Date and Time என்பதை க்ளிக் செய்து எப்பொழுது பிரசுரமாக வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு பதிவை மறுநாள் காலை பிரசுரமாக தேர்வு செய்தீர்கள் என்றால் மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இல்லையென்றாலும் தானாக பிரசுரமாகும். மேலும் ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகளை இன்று பதிந்தது போலவும் மாற்றலாம்.
Location - இது உங்கள் இருப்பிடத்தைக் காட்டுவதற்காக பயன்படுகிறது. இதனை தவிர்ப்பது நலம்.
Options - இந்த பகுதியில் கீழுள்ள வசதிகள் உள்ளன.
Reader Comments - நீங்கள் எழுதும் அந்த பதிவில் வாசகர்கள் பின்னூட்டம் (Comment) இடலாமா? வேண்டாமா? என்பதை தேர்வு செய்யலாம். (இது மற்ற பதிவுகளை பாதிக்காது. எழுதும் அந்த பதிவிற்கு மட்டுமானது)
Compose Mode - Compose Mode-ல் வைத்து பதிவு எழுதும் போது HTML Code இணைத்தால், அது Code-ஆகவே தெரிவதற்கு "Show HTML literally" என்பதனையும், Code-ற்கு பதிலாக அதன் வெளியீடு தெரிவதற்கு "Interpret typed HTML" என்பதனையும் தேர்வு செய்யவும்.
Line Breaks - இது தேவையில்லை விட்டுவிடுங்கள். ( இரண்டும் முயற்சித்தேன். ஒன்றாகத் தான் உள்ளது)
பதிவு எழுதியப் பின் Publish என்பதை கொடுக்க வேண்டியது தான். கொடுத்தபின் அனைத்து பதிவுகளும் இருக்கும் Posts பக்கத்திற்கு வரும். அங்கு மேலே உள்ள View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கை பார்க்கலாம்.

என் மாதிரி தளத்தின் முதல் பதிவு:
உலவியின் மேலே முகவரி பெட்டியில் http://tamiltholilnutpam.blogspot.com/ என்று இருக்கும். அது உங்கள் ப்ளாக் முகவரி. பதிவின் தலைப்பை க்ளிக் செய்து பிறகு முகவரியை பார்த்தால் http://tamiltholilnutpam.blogspot.com/2015/06/isf-design.htmlஎன்று இருக்கும். இது அந்த குறிப்பிட்ட பதிவின் முகவரி. ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி முகவரிகள் இருக்கும்.
இறைவன் நாடினால் மற்றவற்றை அடுத்தடுத்தப் பகுதிகளில் காண்போம்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment