உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது  வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஆண்டு வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
தொலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு அதிக இலாபம் கிடைத்ததாகவும், உடனடியாக பணம் சம்பாதிப்பதை விட எதிர்கால தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மட்டும் 3.85 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிய பேஸ்புக், அதன்மூலம் 696 மில்லியன் டொலரை இலாபமாக பெற்றது. 
இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதுமான பேஸ்புக்கின் வருமானம் 58 சதவீதம் உயர்ந்து 12.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இதனால் அதன் இலாபம் 2.9 பில்லியன் டொலர் என்ற அளவிற்கு இருமடங்காக உயர்ந்துள்ளது.
இது குறித்து பேஸ்புக்கின் நிறுவனர்  மார்க் ஸூகர்பெர்க் கூறுகையில் ,
எங்களுக்கு பணம் சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வம் இருந்தால், நாங்கள் அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களின் விளம்பரங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தியிருப்போம். ஆனால் அதில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால் நாங்கள் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top