skype_business_001பேஸ்புக் நிறுவனம் இலவச வீடியோ காலிங் சேவையை மெசஞ்சர் அப்ளிகேஷனில் வழங்கியுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் போன்று அதன் குறுந்தகவல் செயலியையும் பிரபலமாக்க திடடமிட்டிருக்கின்றது. தற்சமயம் மெசஞ்சர் செயலியில் சுமார் 60 லட்சம் பயனாளிகள் இருக்கின்றனர்.
மெசஞ்சர் செயலியின் வலது புறத்தில் மேல் பகுதியில் வீடியோ ஐகான் இருக்கின்றது, இதற்கு முன் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சத்தினை கம்ப்யூட்டர்களுக்கு வழங்கியது. மெசஞ்சர் ஆப் மைகரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப், ஆப்பிளின் பேஸ்டைம், மற்றும் கூகுளின் ஹேங்அவுட் போன்ற செயலிகளுக்கு போட்டியாக விளங்கும். இந்த வீடியோ காலிங் சேவையானது ஆப்பிளின் ஐஓஎஸ், கூகுளின் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் பெல்ஜியம், கனடா, க்ரோடியா, டென்மார்க், பிரான்ஸ், க்ரீஸ், ஐயர்லாந்து, லித்துவேனியா, மெக்ஸிகோ, நைஜீரியா, நார்வே, ஓமன், போலாந்து, போர்சுகல், அமெரிக்கா மற்றும் உருகுவே போன்ற நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற நாடகளுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top