மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் கூகிள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைப்பதன் காரணமாக ஆண்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் மிகவும் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. 
காரணம் மதிப்பு மிக்க அப்ளிகேஷன்கள் மற்றும் இலவச கேம்ஸ் அப்ளிகேஷன்கள் தரமாகவும் இலவசமாகவும் கூகிள் பிளேஸ்டோரில் கிடைக்கிறது. இந்த அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் மொபைல்களைத் தவிர  மற்ற சாதனங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 
அதாவது தரமிக்க அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தவும், மதிப்பு மிக்க விளையாட்டு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தவும் உங்களிடம் நல்லதொரு தரமிக்க ஆண்ட்ராய்ட் போன் இருக்க வேண்டும். அனைவரிடமும் ஆண்ட்ராய்ட் போன் இருப்பது என்பது சாத்தியமில்லை..

how-to-play-android-mobile-games-on-computer-step-by-step-guide

காரணம் ஆண்ட்ராய்ட் போன் என்பது அனைவரும் வாங்ககூடிய விலையில் இருப்பதில்லை... அதிக விலைகொடுத்து, ஆண்ட்ராய்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இதுவரைக்கு சாத்தியமாகியுள்ளது. 
மற்றவர்கள் ஆண்ட்ராய்ட் கேம்ஸ்கள் மற்றும் பயன்மிக்க அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த முடியாதா? என்றால் நிச்சயம் முடியும் என்கிறது Blue Stacks அப்ளிகேஷன். 
ஆண்ட்ராய்டில் பயன்படுத்தப்படும் வீசாட் அப்ளிகேஷன் மற்றும் வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்களையும் (WeChat and WhatsUp apps)கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும். 
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். 
முதலில் புளூ ஸ்டாக் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். 
புளூஸ்டாக் மென்பொருளை நிறுவிய பிறகு, முதலில் புளூஸ்டாக் மென்பொருளை திறக்கும்பொழுது அதனுடைய டேட்டாபேஸ், மற்றும் பகுதி கூறுகள் (Database and Components )லோட் ஆகி வர ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அதுவரைக்கும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். உங்களுடைய இணைய இணைப்பின் வேகத்திற்கேற்ப இந்த நேரம் மாறுபடும். 
திறந்த பிறகு அதில் உள்ள My Apps என்பதை கிளிக் செய்யவும். பிறகு அதன் கீழ் இருக்கும் app search என்பதை செலக்ட் செய்யுங்கள். 

செலக்ட் செய்த பிறகு ஒன்டைம் செட்டப் (One time setup) தோன்றும். அதில் கன்டினியூ கிளிக் செய்யுங்கள். 
அடுத்து உங்களுடைய கூகிள் அக்கவுண்ட்டில் லாகின் செய்யச்சொல்லிக் கேட்கும். உங்களுடைய கூகிள் அக்கவுண்டின் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்துகொள்ளுங்கள். 
பிறகும் தோன்றும் சர்ச் பாக்சில் உங்களுக்கு வேண்டிய ஆண்டார்ய்ட் அப்ளிகேஷனின் பெயரைக் கொடுத்து தேடிப்பெற்று, Download கொடுத்து அதை உங்களுடைய கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். 
இன்ஸ்டால் செய்த பிறகு, அந்த அப்ளிகேஷனை திறக்க, புளூஸ்டாக்ஸில் My apps பட்டனை கிளிக் செய்யுங்கள். 
நீங்கள் இன்ஸ்டால் செய்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் அங்கு இருக்கும். அதை கிளிக் செய்து திறந்து நீங்கள் கம்ப்யூட்டரிலேயே கேம்ஸ் விளையாடலாம். 

அவ்வளவுதான்.. இந்த நேரத்தில் புளூஸ்டாக் மென்பொருளைப் பற்றியும் சில வரிகள் சொல்லியே ஆக வேண்டும். இது ஒரு இலவச மென்பொருள். ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. உங்களது வசதிக்கேற்ப இதில் உள்ள செட்டிங்ஸ்களை மாற்றி அமைக்கத்துக்கொள்ளலாம். மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய இடைமுகம் (Easy User Interface) கொண்டது. 
ஒரு சில ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும்பொழுது அப்ளிகேஷன் கிராஸ் ஆகிவிட வாய்ப்பும் உள்ளது. காரணம் இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா வெர்சனில் இருப்பதால் இதுபோன்ற வழுக்கள் (Errors) தோன்றுவதும் இயல்புதான். முழுமையான புளூஸ்டாக் மென்பொருள் உருவாகும் வரை இதுபோன்ற பிழைகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். 
அதேபோல இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவும்பொழுது, உங்களுடைய கிராபிக்ஸ்கார்டு புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்க வேண்டும் (New Updated Graphics card). மேம்படுத்தல் இல்லாத கிராபிக்ஸ் கார்ட் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய முடியாது. அதற்கு உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ்கார்ட் மாடலின் பெயரைத் தெரிந்துகொண்டு அதை அப்டேட் செய்துகொண்ட பிறகு, மீண்டும் புளூஸ்டாக் மென்பொருளை நிறுவிக் கொள்ள முடியும்.

நான் இந்த மென்பொருளை நிறுவும்பொழுது, நிறுவமுடியவில்லை. என்னுடைய கிராபிக்ஸ் கார்ட் டிரைவர் மென்பொருளை மேம்படுத்தப்பட்ட பதிப்பை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்த பிறகே இந்த புளூஸ்டாக்ஸ் மென்பொருளை நிறுவ முடிந்தது. 
நன்றி.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top