
நீங்கள் விண்டோவ்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவராயின் இந்த தமிழ் தட்டச்சி வசதியைப் பயன்படுத்தலாம்.
இதன் முக்கிய பயன்பாடு என்னவெனில் இணைய இணைப்பு இல்லாத போதும் தமிழ் தட்டச்சு வசதியைப் பெறலாம்.
முதலில் இந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள்.http://www.google.com/inputtools/windows/
இங்கே மொழி தெரிவில் தமிழ் அல்லது TAMIL என்பதை உறுதிப்படுத்தி, என்பதையும் உறுதிப்படுத்தி அதன்கீழ் DOWNLOADஎன்பதை சொடுக்கி அந்த நீட்சியை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கணனியின் டூல் பாரில் அந்த நீட்சி கீழேயுள்ள படத்தில் சிவப்பு வட்டத்தில் உள்ளதைப் போன்று காட்சியளிக்கும்.இங்கே EN என இருந்தால் அதன் மீது கிளிக் செய்து TA TAMIL (INDIA) என்ற தெரிவை கிளிக் செய்யவும்.இப்போது நீங்கள் இந்த வசதியைப் பெற்றுவிட்டீர்கள்.
இந்த வசதியை நீங்கள் பேஸ்புக்கில் மாத்திரம் அல்ல ஸ்கைபிலும், ப்ளாக்கரில் பதிவுகள் எழுதுவதற்கும், கூகுல் பிளஸ்ஸிலும், GMAIL மூலம் மின்னஞ்சல்அனுப்புவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment