அதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை நாங்கள் விரும்பிய வடிவங்களில் மாற்றக்கூடியவிதத்தில் சிறப்பான ஒரு சேவையை வழங்குகின்றது. இந்த சேவையின் மூலமாக கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை எமக்கு பிடித்தமான படத்தினைக்கொண்டு மாற்றியமைக்க முடியும்.

இதைவிட கூகிள் வழங்கும் படங்களின் மூலமாகவும் மாற்றியமைக்கலாம்.

கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள்:


1. முதலில் கூகிளின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.(Go to Google Homepage)

பின்னர் அதில் தோன்றும் Change background image என்னும் இடத்தில் அழுத்துங்கள்.





2. பின்னர் உங்களுடைய ஜிமெயில் மின்னஞ்சல்(Gmail Account ID) மற்றும் கடவுச்சொல் (password) ஆகியவற்றை வழங்கி புகுபதிகை(Login) செய்துகொள்ளுங்கள்.



3. புகுபதிகை செய்தபின்னர் நீங்கள் விரும்பிய படத்தினைக்கொண்டு பின்னணி வடிவத்தினை மாற்றியமைக்கலாம்.




4. படத்தினை தெரிவுசெய்த பின்னர் Select என்பதினை அழுத்துங்கள் இப்பொழுது பின்னணி வடிவமானது உங்களுக்கு பிடித்தமான படத்துடன் தோற்றமளிக்கும்.










0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top