73544d56-2690-41c3-9d58-b4a50abf7bd1_S_secvpfமுன்பு, ஏழை மக்கள் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பணமின்றி தவிக்கும் போது பேஸ்புக் நிறுவனம் ஒரு ஷேருக்கு இத்தனை பைசா என்று பணம் கொடுத்து வந்தது.




இனி அப்படி பணமின்றி தவிக்கும் மக்களுக்கு நம்மால் முடிந்தளவு பணத்தை, அதுவும் ஒரு போட்டோவுக்கு லைக் கொடுக்கும் நேரத்தில் பணம் கொடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்?.
அதுதான், பேஸ்புக்கின் புதிய சேவை. பேஸ்புக் மெசெஞ்ஜர் அப்ளிகேஷனில் ஸ்டிக்கர்ஸ் அனுப்பும் பட்டன்களுக்கு அடுத்து இனி ‘$’ என்ற புதிய பட்டனும் வரப் போகிறது. இதை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு நம்பரை என்டர் செய்தால் போதும். உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் இலவசமாக பணம் அனுப்பிக் கொள்ளலாம்.
ஏடிஎம் கார்டைப் போல இந்த சேவைக்கென்று பிரத்தியேகமாக ஒரு பின் நம்பரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆப்பிள், ஆண்ட்ராய்ட், கம்ப்யூட்டர் என்று அனைத்திலும் இந்த சேவையை உபயோகப்படுத்தலாம். ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் விரல்ரேகையை பதிவு செய்வதன் மூலமே, பணப்பரிமாற்றம் செய்யமுடியும் என்பது கூடுதல் வசதி.
பணம் பெறுவதற்கு ஒரு முறை மட்டும் உங்கள் டெபிட் கார்ட் நம்பரைக் கொடுத்தால் போதுமானது. இது குறித்து தனது ப்ளாக்கில் பேஸ்புக் வெளியிட்டுள்ள செய்தியின்படி, முதலில் அமெரிக்காவில் அறிமுகம் ஆக இருக்கும் இந்த சேவை விரைவில் உலகம் முழுவதற்குமாக விரிவு படுத்தப்பட இருக்கிறது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top