கூகுல் தளத்திற்கு சென்றால் கூகுளின் மெனுபார் இருக்கும். அந்த மெனுபாரின் நிறம் இளம் கருப்பு நிறத்தில் இருக்கும். இது பார்ப்பதற்கு சற்று மங்கலாக இருப்பதால் சில பேருக்கு இந்த நிறம் பிடிப்பதில்லை. அப்படி நினைப்பவர்கள் இனி கவலை பட தேவையில்லை நமக்கு பிடித்த மூன்று வண்ணங்களில் நாம் சுலபமாக அந்த மெனுபார் கலரை மாற்றி கொள்ளலாம். குரோம் நீட்சியின் உதவியுடன் இந்த மெனுபார் கலரை சுலபமாக மாற்றி கொள்ளலாம். 
இந்த வசதியை பெற நீங்கள் குரோம் உலவியை உபயோகிக்க வேண்டும். கீழே உள்ள நிறங்கள் மாற்ற பட்ட மெனுபாரின்  அழகை காணுங்கள் 









இதில் உங்களுக்கு தேவையான நிறத்தின் மீது க்ளிக் செய்தால் நீட்சி டவுன்லோட் ஆகும். அடுத்து சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Install பட்டனை அழுத்தவும் அவ்வளவு தான் அடுத்த வினாடியே உங்கள் கூகுள் மெனுபாரின் நிறம் மாறிவிடும். கூகுள், ஜிமெயில்,கூகுள் பிளஸ் இப்படி எந்த கூகுள் தளத்திற்கு சென்றாலும் இனி அதன் மாற்ற பட்ட மெனுபாரோடு அழகாக காட்சி அளிக்கும்.







0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top