தனித்த செயலியாக மட்டுமே இருந்து வந்த ‘பேஸ்புக் மெசஞ்ஜர்’ (Facebook Messenger)-ஐ, இனி பேஸ்புக் போன்று ‘உலாவியிலும்’ (Browser) பயன்படுத்த முடியும். அதாவது பேஸ்புக் மெசஞ்ஜரின் இணைய பயன்பாட்டிற்கான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

‘சேட்டிங்’ (Chatting)-ஐ பிரதானப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பேஸ்புக், கால மாற்றத்தில் பல்வேறு கூடுதல் அம்சங்களையும் ஏற்றுக் கொண்டது. 
விளம்பரங்கள், ‘டிரென்டிங் டேக்கள்’ (Trending Tags) போன்றவை பயனர்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துவதாக அமைந்தன. இந்நிலையில் பேஸ்புக், மெசஞ்ஜர் பயன்பாட்டை கணினி தளத்திற்கும், திறன்பேசிகள் தளத்திற்கும் அறிமுகப்படுத்தியது.
ஆனால், தனித்த செயலியாக இருக்கும் அதனை பதிவுறக்கம் செய்து பயன்படுத்த பெரும்பாலான பயனர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக பேஸ்புக், மெசஞ்ஜருக்கான இணைய பயன்பாட்டை அறிவித்துள்ளது. பேஸ்புக் போன்று பயனர்கள் இதனை எந்தவொரு உலாவியிலும் பயன்படுத்த முடியும்.
பேஸ்புக் மெசஞ்ஜரின் இணைய பயன்பாட்டிற்கு பயனர்கள், Messenger.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top