
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்பட உள்ளது.
இதன்படி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் இலவச இணையதள வசதியை பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் ஆரம்பத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இதே போன்ற இலவச சேவையை ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவன வாடிக்கையாளர்களுக்குத் தருவது குறித்தும் பேசி வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகில் 500 கோடி வாடிக்கையாளர்களை பெற இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி என்ற பிரமாண்ட திட்டத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே இலவச இணைய வசதி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை ஏற்கனவே ஆஃப்ரிக்க நாடுகளில் ஃபேஸ்புக் செயல்படுத்த தொடங்கிவிட்டது.
0 comments Blogger 0 Facebook
Post a Comment