சமகாலத்தின் இணையப் பாவனையானது அனைத்து துறைகளிலும் வியாபித்துக் காணப்படுவதுடன், இணையம் இன்றி துரும்பும் அசையாது எனும் நிலமை தோன்றியுள்ளது.
இவ் இணையமானது கல்வித் துறைக்கு பெரும் உதவியாக இருப்பதுடன் மனிதனின் அறநெறிக் கோட்பாடுகளை தகர்க்கக்கூடிய அளவிற்கு பாதகமாகவும் காணப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டள்ளது.
Pew Research Center எனும் நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்விற்காக அபிவிருத்தியடைந்த 32 நாடுகளைச் சேர்ந்த 36,619 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 64 சதவீதமானவர்கள் இணையத்தளம் கல்வித்துறைக்கு பயனுள்ளதாக காணப்படுவதாகவும், 42 சதவீதம் பேர் மனிதனின் அறநெறிக் கோட்பாடுகளை தகர்ப்பதற்கு வழிவகுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment