புதிய பதிவர்களுக்கான சில ஆலோசனைகள். நம் வலை பதிவு மெதுவாக இயகுவதர்க்கும். இழப்பதற்கும் முக்கியக் காரணம்.   நமக்கு தெரியாததை பற்றி எழுதுவது. மற்றும் சில கீழே படியுங்கள்.




Visitor Counter & Online User :
     இந்த Widget எல்லாம் எடுத்துவிடுங்கள்.  இவைகளால் உங்கள் வலை பதிவு தொடங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பதிவை படிக்க வருபவர்களுக்கு வெறுப்புதான் உன்டாகும்.
மற்றும் வருபவர்கள் உங்கள் பதிவை படிப்பதில்தான் கவனம் காட்டுவார்கள். அவர்களுக்கு உங்கள் வலைபதிவிற்க்கு எத்தனை பேர் வந்து சென்றுள்ளார்கள் என்பதெல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
அப்படி பார்த்துவிட்டால் உங்கள் வலை பதிவிற்க்கு வருபவர்கள் கனிசமாக இருந்தால், உங்கள் வலை பதிவு பிரபலமாகாத வலைபதிவு என்று நினைத்துக்கொள்ளக்கூடும்.



Radio வேண்டவே வேண்டாம்:
     Radio Widget, கணினி முன் அமரும் அனைவரும் தங்களை சுற்றி அமைதியாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள் மற்றும் மற்றவர்கள் தூங்கும் வேலையில் கணினி உபயோகப்படுத்துபவர்கள் அதிகம் பேர் என்னையும் சேர்த்துதான். நான் வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்க்கு 10:00 PM ஆகும்.
அந்த வேலையில் ஏதாவது வலை பதிவை பார்க்கும் போது ரேடியோ திடீரென பாடத்தொடங்கும்.
இது போன்ற சமயங்களில் உங்கள் வலை பதிவை முழுவதுமாக வெறுத்து ஒதுக்க கூட தயங்க மாட்டார்கள்.
மற்றும் பல Widget'கள்  உள்ளன கீழே பட்டியளிட்டுளேன்.

 Radio Widgets
Counting Widgets
Online Users Widgets
Flash Widgets

நான் வலை பதிவு ஆரம்பித்தபோது ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. அதில் இதுவும் சில.

மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்.  வாசகர்களுக்கு பதிவு படிப்பதற்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும்.

வலை பதிவின் அழகை பார்க்க வருபவர்களை விட பதிவை படிக்க வருபவர்களே அதிகம்.

நன்றி ...






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top