‘வாட்ஸ்அப்’ (WhatsApp) பயனர்களை மகிழ்விக்கும் செய்தி. மிக நீண்ட நாட்களாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த, வாட்ஸ்அப் எப்பொழுது தொலைபேசி அழைப்புகளுக்கான ‘வாய்ஸ் கால்’ (Voice Call) வசதியை மேம்படுத்தும் என்பதாகும்.

தற்போது அந்த வசதி அண்டிரொய்டு திறன்பேசிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வசதியை பெறுவதற்கு பயனர்கள் வாட்ஸ்அப் செயலியின் 2.11.528 பதிவை தங்கள் அண்டிரொய்டு திறன்பேசிகளில் மேம்படுத்த வேண்டும்.

அதன் பின்னர் இதே வசதியை மேம்படுத்தி இருக்கும் நண்பர்களுக்கு நாம் வாய்ஸ் கால் செய்ய முடியும். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், வாட்ஸ் அப்-ன் இந்த புதிய பதிவு அண்டிரொய்டின் ‘லாலிபாப்’ (Lollipop) இயங்குதளத்தில் மட்டும் தான் மேம்படுத்த முடியும் என்று தொழில்நுட்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வசதி குறித்து கூகுள் நெக்சஸ் 5-ஐ பயன்படுத்தும் பயனர் ஒருவர் கூறுகையில், “வாட்ஸ் அப் வாய்ஸ் கால் வசதியில் புதிய டேப்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ‘கால் ஹிஸ்டரி’ (call history) -ஐ நாம் சேமித்துக் கொள்ளலாம். எனினும், ஒரு சில தருணங்களில் வாய்ஸ் கால் வசதி சரிவர வேலை செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்-ன் அறிமுகத்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குறுந்தகவல் வசதி முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வாய்ஸ் கால் வசதி, அந்நிறுவனங்களின் வர்த்தகத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.







0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top