ஒரு நபர் இறந்த பிறகு அவரது பேஸ்புக் கணக்கை யார் கையாள்வது என்பதை முடிவு செய்யும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கிகளில் கணக்குகளை பேணுபவர்கள் தாம் இறந்த பின்னர் தமது கணக்குகளுக்கு வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் கணக்கை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘legacy contact’ என்ற இந்த வசதியின் மூலம் ஒருவர் இறந்த பின்னர் அவரின் முகப்புத்தகத்தின் கணக்கை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ நியமித்துக் கொள்ளலாம்.
குறித்த நபர் இறந்த பின்னர் அவரால் பிரேரிக்கப்பட்டவர் இறந்தவருடைய பேஸ்புக் கணக்கில் profile information-ஐ எடிட் செய்யலாம், கவர் போட்டோவை அப்டேட் பண்ணலாம், நண்பர்களின் requestகளை accept அல்லது reject செய்யலாம், postகளை சேமித்து வைக்கலாம்.
ஆனால், இறந்தவருடைய private message-களை அவரால் படிக்க முடியாது. மேலும், இறந்தவரின் பெயரில் ஒரே ஒரு போஸ்டை மட்டுமே tag செய்ய முடியும்.
இந்த புதிய வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top