பேஸ்புக் லைக் பட்டன், பேஸ்புக் ஃபேன் பேஜ், பேஸ்புக் லைக் பாக்ஸ் என்று இணையதளம் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளைத் தருகிறது பேஸ்புக் தளம். தற்போது நாம் பார்க்கப் போவது அதிகம் பேருக்கு தெரியாத பயனுள்ள பேஸ்புக் வசதி - Facebook Debugger.

சில சமயம் நமது பதிவுகளை பேஸ்புக் தளத்தில் பகிரும் போது தலைப்பு சரியாக வராது அல்லது படம் தெரியாது அல்லது வேறு பிழைகள் வரும். அப்படி வரும் போது அதனை சரி செய்ய பயன்படுவது தான் Facebook Debugger Tool.

மேலே சொன்ன பிரச்சனை வரும் போது

https://developers.facebook.com/tools/debug என்ற முகவரிக்கு செல்லுங்கள்.


அங்குள்ள பெட்டியில் உங்கள் பதிவின் முகவரியை (ப்ளாக் முகவரியை அல்ல) கொடுத்து Debug என்று கொடுங்கள்.

பிறகு வரும் பக்கத்தில் பதிவின் பெயர், படம் எல்லாம் சரியாக காட்டும். பிறகு நீங்கள் பேஸ்புக்கில் முகவரியை பகிர்ந்தால் பிரச்சனை இருக்காது.

பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் பிழை:


நீங்கள் பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் வைத்திருந்தால் சில சமயம் மேலுள்ள படத்தில் உள்ளதுபோல் "Url is unreachable" என்று காட்டும். ஒரு முறை அதை க்ளிக் செய்தால் போதும். பிறகு காட்டாது.

அதை க்ளிக் செய்தால் பதிவில் சொன்ன Debug பக்கத்திற்கு தான் செல்லும்.





0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top