கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம்.


கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது. ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ்7,8,8.1 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64பிட் வெர்சனும் கிடைக்கிறது.



கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.





0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top