ஆறு மாதம் கழித்து புதியதொரு பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே! இந்த இடைவெளியில் பதிவெதுவும் எழுதாவிட்டாலும் தினமும் வருகை தரும் வாசக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!



இது "நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா?" பதிவின் தொடர்ச்சி ஆகும். அந்த பதிவில் பாஸ்வோர்ட் மறந்துவிட்டால் திரும்பப் பெற வழி ஒன்றினை சொல்லியிருந்தேன். தற்போது அது வேலை செய்யவில்லை (என்று நினைக்கிறேன்). கூகுள் பல்வேறு மாற்றங்களை செய்துவிட்டது.

மறந்த பாஸ்வோர்டை திரும்பப் பெற 

https://admin.google.com/blogname.com/ForgotAdminAccountInfo

என்ற முகவரிக்கு செல்லவும்.

blogname.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும்.

அங்கே காட்டும் Word Verification-ஐ சரியாக கொடுத்தால், உங்கள் பாஸ்வோர்டை மாற்றுவதற்கு இணைப்பு ஒன்று நீங்கள் முன்னர் கொடுத்த மின்னஞ்சலுக்கு வரும். அதன் மூலம் கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top