ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீதான மோகம் குறைவதற்கு சாம்சங், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளே காரணம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது சரிவை நோக்கி செல்கின்றன. அதற்கு என்ன காரணம் என்று ஃபாரெஸ்டர் என்ற நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. மூன்று ஆண்டுகளாக இந்த ஆய்வுகளை இந்த நிறுவனம் நடத்துகிறது.
சோனி, சாம்சங், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் கவர்ச்சிகரமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுவதால் இந்தத் தொய்வு ஏற்பட்டதாக அந்த ஆராய்ச்சியின் முடிவு தெரிவிக்கிறது
.
மொத்தம் 7500 அமெரிக்கர்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்குப் பிடித்தமான தயாரிப்புகள் குறித்து கருத்து கேட்கப்பட்டன. அனைத்து நிறுவனங்களை விட அமேசான் தயாரிப்புகளே முதலிடம் வகிக்கிறது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top