செல்லுமிடமெல்லாம் எளிதாக எடுத்து செல்லும்படி இருப்பதால் மடிக்கணினிகள் குறிப்பிட தகுந்த அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மேஜை கணினிகள் அளவு உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கிறதா என்றால், என்னைப் பொறுத்தவரை 'இல்லை' என்பதே பதில்.

மேஜை கணினிகளில் கட கடவென தட்டச்சு செய்வது போன்று மடிக்கணினிகளில் என்னால் விரைவாக தட்டச்ச முடிவதில்லை. மேசைக் கணினிகள் எனக்கு அதிகம் பழக்கப்பட்டு விட்டதால் கூட இருக்கலாம். மடிக்கணினிகளில் தொடுபலகை (Touchpad) மௌஸ் அளவிற்கு எளிமையாக இல்லை.

பெரும்பாலானோர் ஒரு அசௌகரியத்தை மடிக்கணினிகளில் தட்டச்சும் போது அனுபவித்து இருக்க முடியும். தட்டச்சும் போது தவறுதலாக கை விரல்கள் தொடுபலகையில் பட்டு கர்சர் வேறு எங்கோ சென்று நின்று கொள்ளும். அதனை மீண்டும் இழுத்து வந்து, தட்டச்சு செய்ய வேண்டிய இடத்தில் விட்டு மீண்டும் தட்டச்ச வேண்டி இருக்கும்.

இதற்கு தீர்வாக ஒரு இலவச மென்பொருள் கிடைத்து உள்ளது. TouchFreeze.  இது நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் மடிக்கணினியில் தொடுபலகையை முடிக்கி வைத்து விடும். உங்கள் விரல்கள் பட்டாலும் எந்த பாதிப்பும் இராது. நீங்க தட்டச்சுவதை நிறுத்தியதும் சில வினாடிகளில் தொடுபலகை மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும்.


இந்த இலவச மென்பொருளில் அளவு 251KB மட்டுமே. இதனை இந்த சுட்டிக்கு சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து கொண்டு வேலை செய்யும். இது அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் வேலை செய்யும்.

நீங்கள் லினக்ஸ் உபயோகிப்பாளராக இருந்தால் இதே வேலையை செய்ய மென்பொருளை இந்த சுட்டியில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top