ரகசியத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட விவரங்களை வைத்திருப்போம்.
கணக்குவிவரம், தொலைபேசி எண்கள், கடவுச்சொற்கள், புகைப்படங்கள் என ரகசியங்கள் பலவகைகளில் இருக்கும்.
அதை எல்லாம் மொத்தமாக ஒரு கோப்பறையில் போட்டு அந்த கோப்பறையை தனியே மறைத்து விடலாம். 400 கே.பி அளவுள்ள இந்த சின்ன மென்பொருளினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுடைய கடவுச்சொல் ஏதாவது தட்டச்சு செய்யுங்கள். உடன் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லினை நினைவுகொள்ளும் குறிப்புகளையும் தட்டச்சு செய்யுங்கள.
அதன் பின் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ADD பட்டனை கிளிக் செய்தோ அல்லது கோப்பறையை இழுத்து வந்தோ இந்த விண்டோவின் உள்ளே விட்டு விடுங்கள். இதில் உள்ள Secure கிளிக் செய்து விடுங்கள். உங்கள் கோப்பறையானது மறைந்து விடுவதை கவனியுங்கள்.
இப்போது உங்களுக்கு மீண்டும் உங்களுடைய கோப்பறை தேவையென்றால் இந்த மென்பொருளினை கிளிக் செய்யுங்கள். மீண்டும் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் கடவுச்சொல்லினை தட்டச்சு செய்யுங்கள். வரும் விண்டோவில் நீங்கள் எந்த கோப்பறையை பார்க்க விரும்புகின்றீர்களோ அந்த கோப்பறையை தேர்வு செய்து Unsecure செய்து விடுங்கள்.
இப்போது உங்கள் டிரைவில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களது கோப்பறை இருக்கும். இதில் நிறைய கோப்பறையை போடும் வசதி உள்ளதால் நீங்கள் எதை எதை மறைக்க விரும்புகின்றீர்களோ அதை எல்லாம் இதில் போட்டு மறைத்து விடுங்கள்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top