IP எண்ணை வைத்து, கணனியை உபயோகிப்பவர்களின் விபரங்களை அறிய.....!!



ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம்.
விவரங்களை அறிய
1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
                                                              தரவிறக்க சுட்டி

இணையத் தொடர்பு இல்லாமல் போனில் இலவசமாக பேஸ்புக் பயன்படுத்துவது எப்படி?


போன் எதுனா இருக்கா உங்ககிட்ட? இனி அது போதும் முகப் புத்தகத்தில் முழுக. ஆம் இணையம் இன்றி பயன்படுத்தலாம் முகப்புத்தகத்தை. முழுக்க முழுக்க மிக எளிதான வழிதான் தேவை இதற்கு.அட வெறும் 1100 இருந்த போதுமுங்க. 



இது இந்தியாவுக்கு மட்டும் இப்போது. முதலில் உங்கள் அலைபேசியில் இருந்து *325# அல்லது (or *fbk#). இதற்கு உங்களிடம் இணையத் தொடர்பு தேவை இல்லை. கட்டணம் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டும். 

கீழே உள்ள படங்களை பாருங்கள் புரியும்.

        

Facebook India  ஆனது Fonetwish உடன் இணைந்து இந்த வசதியை இந்தியர்களுக்கு வழங்குகிறது. 

முதலில் உங்கள் User name, Password என்று வரிசையாக செல்ல வேண்டும். இந்த வசதி இப்போது ஏர்டெல், ஏர்செல்,ஐடியா, டோகோமோ நிறுவனப் பயனர்களுக்கு இது கிடைக்கும். 

இதற்கு ஒரு நாளுக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே போதும் என்று சொல்லப்பட்டு உள்ளது. (தமிழன் இலவசமா எதிர் பார்ப்பான்னு தெரியல விடுங்க). இதன் மூலம் எளிதில் சாட் செய்யலாம், உங்கள் செய்திகளை பகிரலாம். 

இணையத் தொடர்பு இல்லாத நேரங்களில் இது பெறும் உதவி செய்யும். ஆபத்தான நேரங்களில் கூட இது உதவலாம். மிக அருமையான வசதி. பயன்படுத்தி பார்ப்போமே. 

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து முதுகு வலி பின்னி எடுக்குதா? அப்போ இத படிங்க!


மனம் மயங்க வைக்கும் கார்பரேட் உலகத்திற்கு உங்களை தாரை வார்த்து விட்டவரா நீங்கள்! நாள் முழுவதும் இதற்காக கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்திருப்பதால் சோர்ந்திருப்பவரா?
  
கம்ப்யூட்டருக்கு முன்னால் முறையான நிலையில் அமராத போது, முதுகு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி மற்றும் உங்களுடைய கைகள், விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் கடுமையான வலி உணர்வுகள் ஆகியவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். எனவே, நல்ல நிலையில் கம்ப்யூட்டருக்கு முன்னர் அமரும் நிலையையும், மேலும் சில நல்ல பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது மேற்கண்ட பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்க உதவும்.
நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும் அல்லது படுக்கும் போதும் உங்களுடைய உடலை சரியான நிலையில் வைத்திருப்பதும் மற்றும் தசைகள் அல்லது மூட்டுகளில் வலி வராமல் இருக்கச் செய்வதும் தான் நல்ல நிலை எனலாம்.
தசைகளை திறமையாக பயன்படச் செய்ய விரும்பினால், எலும்புகளையும், மூட்டுகளையும் நேராக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். சரியான நிலையில் இவ்வாறு வைத்திருப்பதன் மூலமாக மூட்டுகளில் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்த்திட முடியும். குறிப்பாக நீங்கள் கம்ப்யூட்டர்களுக்கு முன்னால் நெடுநேரத்திற்கு அமர நேரும் வேளைகளில், சரியான நிலையில் அமர்வது உங்களுடைய முதுகெலும்பை அழுத்தம் உணராத இடமாக வைத்திருக்கவும் மற்றும் தசை வலி மற்றும் முதுகு வலி வராமல் வைத்திருக்கவும் உதவும். சிறந்த பார்வைக்கு மட்டுமல்லாமல், சரியான நிலையில் அமர்வதால் தசை வலிகள் குறைவதுடன், உடலில் குறைந்த அளவு சக்தியை மட்டுமே செலவிட வைக்கவும் முடியும்.
ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய முதுகையும் மற்றும் தோள்பட்டைகளையும் நேராக வைத்திருக்கப் பழக வேண்டும். மேலும், உங்களுடைய பிட்டங்கள் நாற்காலியின் பின்புறத்தை தொட்டுக் கொண்டிருக்கவும் வேண்டும்.

உங்களுடைய முதுகுப் பகுதியின் வளைவை சாதாரணமாக இருக்கச் செய்யும் வகையில் குஷன்களையோ அல்லது சுருட்டி வைக்கப்பட்ட டவல்களையோ பயன்படுத்தலாம். சரியான நிலையில் உட்கார்வதற்காக, உங்களுடைய நாற்காலியின் முனையில் அமர்ந்து கொண்டு, முன்னோக்கி மெதுவாக சாய்ந்து கொள்ளுங்கள். பின்னர், உங்களுடைய முதுகுப் பகுதியின் வளைவை முடிந்த வரையில் நேராக வரச் செய்யுங்கள். இந்த நிலையிலேயே சில நொடிகளுக்கு இருக்கவும். அதன் பின்னர், உங்களுடைய இடுப்பு பகுதிக்கு உடலின் எடையை தள்ளியவாறு, சுமார் 10 டிகிரிகளுக்கு வளைந்து உட்காராலாம்.

கம்ப்யூட்டரின் திரையிலிருந்து கையை நீட்டும் தொலைவில் அமர்ந்து கொள்வதன் மூலம், உங்களுடைய பார்வையின் இடைவெளியை கட்டுப்படுத்த முடியும். வலது புறமாக உங்களுடைய முழங்கால்களை மடித்து உட்காரலாம் மற்றும் கால்களை குறுக்காக வைத்தவாறு அமர்வதை தவிர்க்கவும். உங்களுடைய கால் பாதங்கள் தரையை தொடுமாறு வைத்திருக்கவும் மற்றும் உங்களுடைய கண்களை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வைத்திருக்காமல் நேராக வைத்திருக்கவும். உங்களுடைய புஜங்கள் மற்றும் முழங்கைகளை நாற்காலியில் ஓய்வு நிலையில் வைத்திருங்கள் மற்றும் தோள்பட்டைகளையும் ஓய்வாக வைத்திருங்கள்.

அவ்வவ்போது ஓய்வு இடைவேளை எடுத்துக் கொள்வதும் அவசியமானது. 30 நிமிடங்களுக்கு மேலாக ஒரே நிலையில் அமர்ந்திருப்பதை தவிர்க்கவும். நீண்ட நேரம் வேலை செய்ததாக நினைத்தால், சற்றே கழுத்துக்கான பயிற்சிகளை செய்திடுங்கள் – உட்கார்ந்த இடத்திலேயே இந்த பயிற்சியை செய்யலாம். உங்களுடைய கழுத்தை முன்பக்கமிருந்து, பின்பக்கமாக திருப்பவும் மற்றும் பக்கவாட்டில் இடப்பக்கமிருந்து, வலப்பக்கமாக திருப்பவும். உங்களுடைய கைகள் இரண்டையும் பின்பக்கமாக வைத்துக் கொண்டு, ஃபார்வார்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் பேக்வார்ட் ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகளையும் கூட நீங்கள் செய்யலாம்.

இந்த நிலையிலேயெ ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு உங்களை நிலைநிறுத்தி வைத்திருங்கள்.
30 நிமிடங்களிலிருந்து 1 மணிநேரத்திற்கு ஒரு முறை எழுந்து நிற்கவும் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, கழிவறைக்கு சென்று வருவது, அருகில் பணியில் உள்ளவரின் இடத்திற்கு சென்று வருவது அல்லது கால்களை நீட்டி முழக்கப் பயன்படும் வகையில் உள்ள அலுவல் இடததிற்கு செல்வது போன்ற செயல்களை செய்யுங்கள். இவ்வாறான சரியான நிலைகளை கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது, ஒவ்வொரு நாள் வேலையின் போதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதையும் மற்றும் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பதையும் உணர்வீர்கள்.

மொபைலில் அசுர வேகத்தில் உலவ



தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மொபைலிலும் browser ஐ வைத்து அசுர வேகத்தில் உலவுவதற்க்கு வந்து விட்டது binu browser.இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும் 
மிகவும் வித்தியாசமானது.

இதன் முக்கியாமான அம்சம் இதன் அசுர வேகம் தான்.  Facebook, Twitter, Wikipedia, news, sports ஆகியவற்றையும் நம்ம ஊரின் weatherஐ அறியவும் இதில் வசதி உள்ளது. மேலும் பல பயன்பாடுகளும் நாளுக்கு நாள் இதில் சேர்க்கப்பட்டுவருகிறது.மேலும் குறைந்த அளவு தரவானது உபயோகப்ப்டுத்தப்படுவதால் பணமும் மிச்சமாகிறது. இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காணமுடியும். இதற்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.இதில் மொழிப்பிரச்சினையே கிடையாது. எழுத்துகள் தெளிவாக நம் தாய்மொழியிலேயே அழகாக தெரியும். தமிழில் கூகுள் நியூஸ், தினகரன், தினமலர் மற்றும் பலவற்றை இதில் படிக்கமுடிகிறது. இது மற்ற மொழிகளை கூட ஆதரிக்கிறது.
இதில் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வசதி இலவசமாக smsகளை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். இதில் account ஆரம்பிப்பது மிக மிக சுலபம். உங்களுக்கான பயனர் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் அதனை கொடுத்தால் போதும். நமக்கு உடனே ஒரு பாஸ்கோட் அனுப்புவார்கள். அதனை biNuவில் கொடுத்தால் போதும். நீங்கள் smsகளை அனுப்பலாம்.
இது முற்றிலும் இலவசமான ஒன்று.  இதனை தரவிறக்க


மென்பொருள்கள் இல்லாமல் கணினியின் வேகத்தை அதிகரிக்க


வாங்கிய புதிதில் கணினியில் வேகம்  சூப்பராக இருக்கும்..அதுவே நாளாக நாளாக குறைந்துவிடும்..மென்பொருள் எதுவும் பயன்படுத்தாமலேயே கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவர்கள் என்றால்...

Start=>Programs=>Run

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் என்றால்...

Start=>Programs=>Search=>Run தேர்ந்தெடுக்கவும்.

ஆக... நீங்கள் Run Window வைத் திறக்க வேண்டும். இதற்கு குறுக்கிவிசை Star+R அழுத்தினாலே Run Window திறந்துகொள்ளும். இப்போது அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள். புதிதாக ஒரு window open ஆகும். அதில் 

Computer Configuration==>Administrative Templates==>Network==>Qos Packet Scheduler==>Limit Reservable Bandwidth என்ற வரிசையில் செல்லவும். இப்போது Not Configured என்பதில் டிக் மார்க் இருப்பதை கவனியுங்கள்.

இதை Enable என மாற்றிவிட்டு , Bandwith -ஐ 20 லிருந்து 0 க்கு மாற்றம் செய்துவிடுங்கள்.. அவ்வளவுதான்.. இனி உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து பரிசோதித்துப் பாருங்கள்.. கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும். 

pendrive இன் data transfer வேகத்தை அதிகரிக்க


நண்பர்களே உங்கள் Pendrive வேகம் சில நாட்களுக்கு பிறகு மெதுவாக உள்ளது என்று அனுபவம் உள்ளதா . அதனால் இன்று நான் உங்களின் pendrive வேகத்தை அதிகரிக்க சில பயனுள்ள தந்திரங்களை  தரப்போகிறேன் .


முதல் விஷயம், முதலில், உங்கள் pendrive தரவு பரிமாற்ற விகிதம் போன்ற சில காரணிகளை சார்ந்திருக்கிறது:

1. உங்கள் Pendrive வயது:

நீங்கள் ஒரு புதிய Pendrive வாங்க போது ஃபாஸ்ட்டாக  வேலை செய்யும் ஆனால் அது பழையதாகும் போது , தரவு பரிமாற்ற விகிதம்  குறைய துவக்குகிறது.

2. கோப்புகள்:

தரவு பரிமாற்ற விகிதம் நீங்கள் மாற்றும் கோப்புகளை பொறுத்து அமையும். இசை, docs, வீடியோக்கள் மிக விரைவாக மாற்றப்படலாம் .

3. கோப்புகளின் பதிவிடம்

தரவு பரிமாற்ற வீதம் கூட கோப்புகளின் பதிவிடம்  பொறுத்தது. ஒரே டிரைவ் இல் கோப்புகளை பரிமாற்றினால் அது மிக விரைவாக மாறும் . ஆனால் ஒரு டிரைவ் இல் இருந்து வேறு டிரைவ்வுக்கு மாற்றினால் வேகம் குறையும் . அதேபோலதான் Pendrive விலும் .

4. USB போர்ட் பதிப்பு:

USB போர்ட் பதிப்பு 2.0 மிகவும் பிரபலம் மற்றும் 2000 ஆம் ஆண்டில் பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட கணினிகளில் 2.0 USB போர்ட் பதிப்பு உள்ளது. USB போர்ட் 2.0 இந்த பதிப்பு நீங்கள் 35mbps வேகத்தில் (Theortically) பரிமாற்ற உதவும் .

உங்கள் pendrive பற்றிய NTFS, கோப்பு முறையை மாற்றினால் உங்களால் வேகமாக கோப்புகளை பரிமாற்றம் செய்ய முடியும் .

Follow Below Steps 

1: Plugin your Pendrive, Right click on your pendrive and select Format (You will Loose All your data in your pendrive so better Take a backup) Then,Select NTFS File system, Uncheck Quick Format And Click On Start.



Note: We Are Changing The File system to NTFS Because FAT 32 Can not Handle Large amount of data

2: After Formating Your Pendrive and Converting it To NTFS file System, Its now Time to Change the Device Policy.

Now Again Goto Your Pendrive Properties , click on  Hardware Tab. Select Your Usb Device from the list and click on Properties .



After Clicking on Properties You will see a new Dialog Box,Click on Change Settings, Another Dialog Box will appear , Click on Policy Tab and Select Better Performance, Click ok .
Thats it. I will Recommend to Restart Your Computer

கணனியை Format செய்வது எப்படி ?......... Windows 7 install செய்யும் முறை !


சரி நம்மில் பலருக்கு கணனி பாவிக்க தெரிந்திருந்தும் கணனியை எவ்வாறு Format செய்வது என தெரியாது. இலகுவாக செய்யலாம். முதலில் Windows 7 முழுமையான பதிப்பை பதிவிறக்கி DVD ஒன்றில் Write செய்து கொள்ளவும். பின்னர் அதனை செலுத்தி கணனியை Restart செய்யவும். கணனி தெடக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும் அதில்,
காணப்படும் F11 to Enter Boot Menu என இருக்கும் இது கணனிகளுக்கிடையில் வேறுபடும் அதனால் அதில் F11 என போடப்பட்ட இடத்தில் என்ன கீ இருக்கிறதோ அதனை அழுத்தவும். அதன் பின் கீழ்வரும் Menu தென்படும்
அதில் 1வதாக காணப்படும் CD-ROM/DVD-ROM இனை தெரிந்தெடுத்து Enter செய்திடவும் பின்னர் கணனியானது DVD மூலமாக தொடங்க வினாவும் கீழ் உள்ளவாறு
இவ்வாறு கேட்கும் போது 5 செக்கன்களுக்குள் ஏதாவது Key ஐ இழுத்தி Boot Menu க்கு செல்லலாம். பின் கீழ் உள்ளவாறு வரும்.
அதில் அனைத்தையும் சரியாக Set செய்து விட்டு Next Button ஐ அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்க. அடுத்த பகுதி கீழ் உள்ளவாறு காணப்படும்
இதில் Install Now என்பதை அழுத்தவம் சிறிது நேரத்தில் கீழ்வரும் திரை தென்படும்.
அதில் I accept the following terms என்பதில் Tick செய்து Next ஐ அழுத்தவும். பின்னர் கீழ்வருமாறு திரை தோண்றும்
அதில் Custom என்பதை Click செய்யவும் பின் அடுத்த திரை கீழ் உள்ளது போல் தோண்றும்
அதன் பின் Drive Option(Advanced) என்பதை click செய்து பின்வரும் திரையை பெறலாம்.
அதில் எந்த Drive ல் நீங்கள் Windows 7 ஐ Install செய்ய போகிறீர்களோ அதை Click செய்து Format என்பதை கொடுக்கவும் இனி என்ன கணனியை Format செய்து அப்படியே Next செய்தால் சரி சற்று நேரம் எடுக்கும்.

Pen Driveவில் உள்ளவற்றை இரகசியமாக Copy செய்ய வேண்டுமா?


                          
கணினியின் Motherboard இல் காணப்படும் நினைவகக் கூறுகளில் ஒரு பகுதியாக அமைப்பு நினைவகத்தை கருதலாம்.இந்த நினைவகமானது குறைந்தளவில் மின்வலுவை பயன்படுத்தும் CMOS சில்லுகளின் மூலமே உருவாக்கம் பெற்றுள்ளது.CMOS என்பதன் விரிவாக்கம் Complementary Metel Oxide Silicon என்றவாறு அமையும்.CMOS Chip இற்கு கணினியின் மின் இணைப்புடன் தொடர்பின்றி தொடர்ச்சியாக பற்றரி மூலம் மின்வலு வழங்கப்படும்.இந்த மின்வலுவானது Motherboard இல் இணைக்கப்பட்டுள்ள சிறிய பற்றரி மூலம் பொதுவாக வழங்கப்படும்.இந்த சிறிய பற்றரி மூலம் பொதுவாக வழங்கப்படும்.இந்தச் சிறிய பற்றரி சுமார் ஐந்து வருடங்களுக்கு மின்வலுவை வழங்கும் திறனைக் கொண்டுள்ள போதும் மூன்று வருடங்களுக்கு மேலாக கணினியில் குறித்த பற்றரி பாவிக்கப்பட்டால் அதனை மாற்றுவது பொருத்தமானதாகும்.

CMOS ஆனது கணினி பற்றிய அடிப்படை தகவல்களான கணினியில் குறித்த பற்றரி பாவிக்கப்பட்டால் அதனை மாற்றுவது பொருத்தமானதாகும்.CMOS ஆனது கணினி பற்றிய அடிப்படைத் தகவல்களான கணினியில் இணைக்கப்பட்டுள்ள வன்தட்டுக்களின் வகை,எண்ணிக்கை,நினைவக அளவு,நினைவக அமைப்பு,கணினியின் நேரம்,திகதி மற்றும் வன்பொருள் அமைப்புக்கள் ஆகியவற்றை சேமித்து வைத்திருக்கும்.இந்த Settingsஐ கைமுறையாகவோ (Manual) அல்லது தன்னியக்கமாகவோ மாற்றமுறச் செய்ய முடியும்.CMOS தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும்Chipகள் மின் வலுவை மிகவும் வினைத்திறனாக குறைந்தளவில் பாவிப்பது மிகப் பெரிய அனுகூலமாகும்.கணினிகள் உருவாக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் இந்தத் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை.இதற்கு இத் தொழில்நுட்பம் அப்போதைய நிலையில் மிகவும் உயர் செலவுடையதாக காணப்பட்டதே காரணமாகும்.

பின்னர் IBM நிறுவனத்தால் இது எல்லா கணினிகளிலும் சேர்க்கப்பட்டது.CMOS Chip மற்றும் அதனோடு இணைந்த பற்றரி ஆகிய இரண்டையும் சேர்த்து "PC's CMOS" என அழைக்கப்பட்டது.ஆனாலும் இந்தப் பெயரும் நீண்ட நாட்களுக்கு நிலைக்க வாய்ப்பேற்படவில்லை.வேறு நிறுவனங்களாலும் உற்பத்தி செய்யப்பட்ட கணினிகளில் இந்த Chip மற்றும்
அதனோடு சேர்ந்தால் போல் பற்றரியும் காணப்பட்டதால் இப்பெயர் வழக்கிலிருந்து ஒழிந்தது.

                CMOS Setting ஐ மாற்றிக் கொள்ள !......


                                  
முதலில் CMOS இல் மாற்றங்களை செய்ய எமக்கு என்ன தேவை உள்ளது என்பது பற்றி நாம் ஆராய வேண்டியுள்ளோம்.அடிப்படையாக உங்கள் கணினியின் வன்பொருள் தகவு நிலைபற்றியும் தொகுதியின் (System) மொத்த இயக்கத்தை இயைபாக்கவுமே இவ்வாறாக நீங்கள் மாற்றங்கள் செய்ய முனையலாம்.வன்தட்டுக்கள் (Harddisk) பொதுவாக IDE ஊடாக இணைக்கப்படும்.வன்தட்டுக்கள் ஒழுங்காக இயங்குவதற்கு அவை CMOS Setup இனூடாக இயைபாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.SCSI மூலம் தொடுக்கப்படும் தட்டுக்கள் இவ்வாறு இயைபாக்கப்பட வேண்டிய அவசியமில்லை.ஏனெனில் அவை BIOS (Basic Input Output System) உடன் ஏற்கனவே இயைபாக்கப்பட்டிருக்கும்.கணினியின் தொழிற்பாட்டில் CMOS இன் Setting தாக்கத்தை உண்டு பண்ணும்.CMOS இன் ஊடாக கணினியின் நினைவகம் எந்தளவில் இயங்குகிறது.தற்காலிக சேமிப்பு தன்மை துலங்கல் அடையச் செய்யப்பட்டுள்ளதா,PCI தொடுப்பு
கள் எந்தளவு வேகத்தில் இயங்கவேண்டும் போன்ற பல விடயங்களை மாற்றி அமைக்கலாம்.Menu ககைள் கொண்டுள்ள CMOS Setup மூலமாகவே CMOS இல் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.இது Chipset உடன் இணைந்தாற் போல உங்கள் BIOS இல் அமைப்புக்களை மாற்றங்களுக்கு உட்படுத்த கூடியது.CMOS இன் Setup பகுதிக்கு விசைப்பலகையிலுள்ள சில விசைகளை அல்லது ஒரு விசையினை கணினி தொடங்கும் நிலையில் அழுத்த வேண்டும்.CMOS Setup ஐப் பெற்றுக் கொள்ள நாம் அழுத்தவேண்டிய விசைகளின் சேர்ககை கணினி தயாரிப்பாளர்களிடையே வேறுபடும்.சாதாரணமாக பயன் படுத்தப்படும் விசைகள் (delete, Esc, F1, F2, F4) அல்லது  எந்த விசையை அழுத்தினால்  CMOS Setup இந்கு செல்லலாம் என்ற விடயம் கணினி தொடக்கப்படும் போது திரையில் காட்சியாகும்.(கணணி விண்டோஸ் லோடிங் ஆகும் முன்னர் )
இதன் மூலம் CMOS  Setting சென்று CMOS ஐ மாற்றிக்கொள்ளலாம்.

iOS சாதனங்களிலும் WhatsApp Voice Call வசதி

iOS சாதனங்களிலும் WhatsApp Voice Call வசதி





குறுஞ்செய்தி மற்றும் கோப்பு பகிர்வுகளை மட்டும் கொண்டிருந்த WhatsApp சேவையில் கடந்த மாதம் குரல்வழி அழைப்பு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.எனினும் இந்த வசதியினைAndroid இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களில் மட்டுமே பெறக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் தற்போது அப்பிளின் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனிலும்(Application) குரல்வழி அழைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது iOS 8 பதிப்பில் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், புதிய அப்பிளிகேஷனை iTunes தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

உலகம் முழுவதும் பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 144 கோடியை எட்டியது.




imageஉலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக ‘பேஸ்புக்’ திகழ்கிறது. இந்த வலைத்தளத்தை உலகமெங்கும் 144 கோடி பேர் பயனாளர்களாக உள்ளனர். குறிப்பாக இளைய தலைமுறையினர் சாப்பிட மறந்தாலும் மறப்பார்களே தவிர, ‘பேஸ்புக்’ வலைத்தளத்திற்கு செல்வதற்கு தவறுவதே இல்லை.
தற்போது பேஸ் புக்கின் கால் ஆண்டில் அதன் லாபம் 20 சதவீதம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக மொபைல் விளம்பரம் மூலம் இந்த வருவாய் கிடைத்து உள்ளது. விளம்பரம் மூலம் 3.32 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்து உள்ளது, கடந்த ஆண்டை விட பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 13 அதவீதம் அதிகரித்து உள்ளது. உலகம் முழுவதும் 144 கோடி பேர் பேஸ் புக்கை பயன்படுத்துகின்றனர். மொபைல் மூலம் 125 கோடிபேர் பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுகசர்பெர்க் கூறும் போது இந்த ஆண்டில் வலுவான தொடக்கத்தைடுத்து உள்ளது. நாங்கள் தொடர்ந்து எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதிலும் உலகை இணைப்பதிலும் கவனம் செலுத்துவோம் என்று கூறினார்.
பேஸ்புக் ஹலோ என்ற ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷன் பயன்பாட்டை வெளியிட்டு உள்ளது. இந்த அப்ளிகேஷன் யார் அழைக்கிறார்கள் என்பதை பேஸ்புக் மூலம் தேடி தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் Chromebook மடிக்கணனியில் அதிரடி வசதி



imageஇணைய வலையமைப்பில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம், இணைய வலையமைப்பு தவிர்ந்த ஏனைய பல்வேறு இலத்திரனியல் சாதன வடிவமைப்புக்களிலும் காலடி பதித்து வருவது தெரிந்ததே. இவற்றின் ஒரு அங்கமாகவே Chromebook எனும் மடிக்கணனிகளை வடிவமைத்து வெளியிட்டிருந்தது.
தற்போது இந்த மடிக்கணனிகளை பாவிக்கும் பயனர்களுக்காக Box Cloud எனும் ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்க முன்வந்துள்ளது.
இதன் மூலம் Chromebook பயனர்கள் கோப்புக்களை நேரடியாகவும், இலகுவாகவும் Box Cloud சேமிப்பகத்தில் சேமித்து பயன்படுத்த முடியும்.

மொபைல் போன் கேமராவினை வெப் கேம் போன்று பயன்படுத்துவது எப்படி?




ஸ்மார்ட்போன் மூலம் எதையும் செய்ய முடியும் என்றாகி விட்டது, ஆன்லைன் சாட்டிங் முதல் வீடியோ சாட் வரை தொழில்நுட்பம் தொலை தொடர்பு முறையை எளிமையாக்கியிருக்கின்றது. இந்நிலையில் வெப் கேமராக்களின் விலை சற்று அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில் கொண்டு வெப் கேமராக்களுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் கேமராக்களை பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா.
ஸ்மார்ட்கேம் பேக்கேஜ் செயலியை உங்களது ஆன்டிராய்டு, ஐபோன்களில் சுலபமாக இன்ஸ்டால் செய்ய முடியும். இதை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் எக்ஸ்ட்ராக்ட் செய்ய வேண்டும்.ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ்களுக்கு .exe என்ற ஃபைல் கம்ப்யூட்டர் மற்றும் ஆன்டிராய்டு, ஐஓஎஸ் கருவிகளுக்கு இருக்கும்.இரு கருவிகளிலும் இன்ஸ்டால் செய்த பின் ப்ளூடூத் அல்லது யுஎஸ்பி மூலம் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.ஐஓஎஸ், ப்ளாக்பெரி, சிம்பயான் கருவிகளில் இந்த செயலி பயன்படுத்த முடியும். இதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பதிவிறக்கம் செய்தவுடன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.பின் ஆரம்பிக்கலாம்.ஐபி வெப் கேம் உங்களது ஆன்டிராய்டு கருவியை வயர்லெஸ் பிசி வெப் கேமராவாக மாற்றும். இதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அடுத்து அப்ளிகேஷனினை இன்ஸ்டால் செய்து கணினி மற்றும் மொபைல் கருவியை ஒரே வைபை மூலம் இணைக்க வேண்டும்.இனி கேமராவினை கம்ப்யூட்டருடன் இணைத்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
மொபைல் போன் கேமராவினை வெப் கேம் போன்று பயன்படுத்துவது எப்படி?

ஸ்கைப் செயலிக்கு போட்டியாக வீடியோ காலிங் அம்சம் வழங்கும் பேஸ்புக் மெசேஞ்சர்




skype_business_001பேஸ்புக் நிறுவனம் இலவச வீடியோ காலிங் சேவையை மெசஞ்சர் அப்ளிகேஷனில் வழங்கியுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் போன்று அதன் குறுந்தகவல் செயலியையும் பிரபலமாக்க திடடமிட்டிருக்கின்றது. தற்சமயம் மெசஞ்சர் செயலியில் சுமார் 60 லட்சம் பயனாளிகள் இருக்கின்றனர்.
மெசஞ்சர் செயலியின் வலது புறத்தில் மேல் பகுதியில் வீடியோ ஐகான் இருக்கின்றது, இதற்கு முன் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சத்தினை கம்ப்யூட்டர்களுக்கு வழங்கியது. மெசஞ்சர் ஆப் மைகரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப், ஆப்பிளின் பேஸ்டைம், மற்றும் கூகுளின் ஹேங்அவுட் போன்ற செயலிகளுக்கு போட்டியாக விளங்கும். இந்த வீடியோ காலிங் சேவையானது ஆப்பிளின் ஐஓஎஸ், கூகுளின் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் பெல்ஜியம், கனடா, க்ரோடியா, டென்மார்க், பிரான்ஸ், க்ரீஸ், ஐயர்லாந்து, லித்துவேனியா, மெக்ஸிகோ, நைஜீரியா, நார்வே, ஓமன், போலாந்து, போர்சுகல், அமெரிக்கா மற்றும் உருகுவே போன்ற நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற நாடகளுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் பார் பட்டனை நீக்கிவிட கூகுள் முடிவு..



imageதற்சமயம் சந்தையில் வெளியாகும் தொழில்நுட்ப கருவிகளின் வடிவம் மற்றும் அளவு குறைந்து கொண்டே வருகின்றது. அந்த வகையில் கூகுள் நிறுவனமும் கீபோர்டுகளில் இருக்கும் ஸ்பேஸ் பார் பட்டனை நீக்க முடிவு செய்திருப்பதாக தெரிகின்றது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மேக்புக் கருவிகளில் கீபோர்டுகளின் இடத்தினை குறைத்திருப்பதை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரு முறைகளுக்கும் அதிகமாக இந்த திட்டத்தினை கூகுள் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் க்ரோம் லாப்டாப்களில் சிறிய அளவிலான ஸ்பேஸ் பார் பட்டனை விரைவில் கூகுள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Microsoft Office 2016 Preview பதிப்பு அறிமுகம்



imageஅலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையான வேலைகளுக்கு சிறந்த மென்பொருளாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Microsoft Office மென்பொருட்கள் விளங்குகின்றன.இம் மென்பொருளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி Microsoft Office 2007, Microsoft Office 2010, Microsoft Office 2013 ஆகிய பதிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த 12 மாதங்களாக உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த Microsoft Office 2016 பதிப்பின் Preview பதிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இம்மென்பொருளினை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

இனி பேஸ்புக் பக்கத்தையும் வலைத்தளமாக்கலாம்!


அனைத்து தொழில் சார்ந்த துறைகளுக்கும் முகவரி என்பது அவசியமான ஒன்று. நவீன காலத்தில், வர்த்தக ரீதியாக நிறுவனங்களுக்கான முகவரி என்பது வலைத்தளமே. பெரு நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வலைத்தளங்களை வைத்திருக்கும் பொழுது, வலைத்தளங்களை உருவாக்க இயலாத சிறு தொழில் நிறுவனங்கள் என்ன செய்வது?
தங்கள் பேஸ்புக் பக்கத்தையே வலைத்தளமாக மாற்றிக்கொள்ளும் வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு யோசனையின் செயல்வடிவமே ‘பேஜர்’ (Pager) என்னும் புதிய செயலியாகும்.
நியூ யார்க்கைச் சேர்ந்த மூன்று பொறியாளர்கள் உருவாக்கி உள்ள இந்த செயலி, பயனர்களின் பேஸ்புக் பக்கத்தை வலைத்தளமாக்கப் பயன்படுகிறது.
இந்த பேஜர் செயலியை திறன்பேசிகளில் மேம்படுத்தியவுடன், அதனுள் நுழைய பேஸ்புக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அந்த பேஸ்புக் பக்கத்திற்கு செல்லும்போது, அங்கு பயனர்களின் பல்வேறு பேஸ்புக் பக்கங்கள் வரிசையாகத் தோன்றும். அவற்றில் இருந்து தேவையான ஒன்றைத் தேர்வு செய்து, அதில் உள்ள தகவல்களைக் கொண்டு அதனை ஒரு புதிய வலைத்தளமாக மாற்றிக் கொள்ள முடியும்.
வலைத்தளத்தின் முதல் பக்கம், ‘அறிமுகம்’ (About), ‘செய்தி’ (News), ‘நிகழ்வுகள்’ (Event) மற்றும் ‘கேலரி’ (Gallery) என்ற நான்கு பகுதிகளைக்  கொண்டதாக இருக்கும். அந்தந்த பகுதிகளுக்கு தகுந்தார் போல் தகவல்களை சேகரித்து வலைத்தளமாகப் பயன்படுத்தலாம்.
எனினும், இந்த புதிய செயலி இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இது முழுமை பெற்ற பின்பு, அதனை சிறிய தொழில் செய்வோர் எத்தகைய செலவும் இல்லாமல் வலைத்தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது பழமொழி. இனி, “வயதின் அளவும் முகத்தில் தெரியும்” என்பது மைக்ரோசாப்ட்டின், ஹவ்-ஓல்ட் தளத்திற்கான புது மொழி. ‘மைக்ரோசாப்ட் பில்ட் 2015′ (Microsoft Build 2015) நிகழ்வை கொண்டாடிவரும் அந்நிறுவனம், நித்தமும் தங்களின் ஆய்வுகள் மற்றும் தயாரிப்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

அந்த வரிசையில் மைக்ரோசாப்ட்டின் புதிய வரவு ‘ஹவ்-ஓல்ட்’ (How-Old) வலைத்தளம். இந்த வலைத்தளத்தில், நீங்கள் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்த சில நொடிகளில் வயது என்ன என்பதை இந்த தளம் தெரிவித்துவிடும். ‘ப்ராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட்’ (Project Oxford) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே, மைக்ரோசாப்ட் இந்த வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.
how-old-e1430502315530
இந்த வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே இணையவாசிகளிடம், எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிட்ட அந்த திட்டத்தின், முழு பணிகளே நிறைவடையாத நிலையில், பயனர்கள் கொடுத்த வரவேற்பு மைக்ரோசாப்ட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நீங்களும் உங்கள் புகைப்படத்தைக் கொண்டு, உங்கள் வயதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், கீழே உள்ள இணையத் தொடர்பைத் தொடரலாம்.

விண்டோஸ் 10 க்கு அடுத்து எதுவும் வெளிவராது: காரணம் என்ன?



windows_10_0மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது.
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘இக்னைட்’ (Ignite) தொழில் நுட்ப மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெர்ரி நிக்சன், “தற்போது நாங்கள் விண்டோஸ் 10-ஐ வெளியிடுகிறோம். இதுதான் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி பதிப்பு(last version). இதற்கடுத்து எந்த இயங்குதளமும் வெளிவராது. இதனால், விண்டோஸ் 10-க்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இதனால் மைக்ரோசாப்ட் இனி இயங்குதளங்களையே வெளியிடாதா? என்று மாநாட்டுக்கு வந்திருந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பரபரக்க ”கடந்த வருடம் விண்டோஸ் 8.1-ஐ வெளியிடும் போது விண்டோஸ் 10-க்கான வேலையை ரகசியமாக செய்து வந்தோம். தற்போது விண்டோஸ் 10 க்கு அடுத்து புதுப்புது பதிப்புகளை வெளியிடாமல் விண்டோஸ் 10 இயங்குதளத்தையே தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றபடி அப்டேட் செய்ய இருக்கிறோம்” என்று கூறி அனைவரையும் ஆசுவாசப்படுத்தியுள்ளார் ஜெர்ரி நிக்சன்.

ஹோம் பட்டன் இல்லாத ஐபோன் 7 புகைப்படங்கள் வெளியாகின

ஆப்பிள் ஐபோன் 6 வெளியாகி சில மாதங்களே நிறைவடைந்திருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை போனாக ஐபோன் 7 இருக்கும் என செய்திகள் வெளியாக துவங்கிவிட்டன. இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 7 குறித்து பல செய்திகள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இங்கு ஹோம் பட்டன் இல்லாமல் வெளியாகி இருக்கும் புதிய ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களை பாருங்கள்..

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் கருவியை வெளியிடும் முன் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 போனை வெளியிடும் என்று கூறப்படுகின்றது.ஜெர்மன் பப்ளிகேஷன் கம்ப்யூட்டர் பில்டு மற்றும் வடிவமைப்பாளரான மார்டின் ஹேஜெக் புதிய ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களை தயாரித்துள்ளனர்.ஐபோன் 7 டிஸ்ப்ளேவானது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு ஹோம் பட்டனும் அதனுள் வைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 7 பின்புறத்தில் விளக்குடன் கூடிய ஆப்பிள் லோகோ மற்றும் இரு லென்ஸ் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கான்செப்ட் புகைப்படங்கள் பார்க்க உண்மையானது போன்று காட்சியளிக்கின்றது. இருந்து இவைகளில் மாறுதல்கள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

image
image


image