உங்கள் Desktop Icon களை அழகுபடுத்த

வழக்கமாக நமது கணினியின் Desktop -இல் நாம் அடிக்கடி உபயோகிக்கும் பயன்பாடுகளை ஷார்ட்கட் களாக உருவாக்கி வைத்திருப்போம். 



இவற்றில் பலவற்றை அதன் ஐகான்களுக்கு கீழிருக்கும் பெயரை  படிக்காமலேயே, நம்மால் அதனை மனதில் இருத்திக் கொள்ள இயலும். உதாரணமாக Internet Explorer, My Computer, Firefox, Google Chrome போன்றவைகளின் ஐகான்களை பார்த்தாலே போதும்.

இது போன்ற பயன்பாடுகளின் ஐகான்களுக்கு கீழிருக்கும் டெக்ஸ்டை மறைய வைப்பதன் மூலம் நமது டெஸ்க்டாப்பை மேலும் அழகு படுத்த இயலும். இதனை செயல் படுத்த, தேவையான ஐகானை வலது க்ளிக் செய்து Rename கொடுத்து, புதிய பெயருக்கு பதிலாக, Alt+255 (Numeric Keypad) கொடுக்கலாம். இதன் மூலம் எழுத்துக்கு பதிலாக வெற்று கேரக்டர் உருவாக்கப்படும்.

 
மற்றுமொரு ஐகானை பெயர் மாற்றும் பொழுது, Alt+255+255 என இரண்டு முறையும், அதற்கடுத்த ஒவ்வொரு பெயர்மாற்றத்திற்கும் ஒவ்வொன்றாக அதிகப்படுத்திக் கொள்ளலாம். (ஒரே ஃபோல்டரில் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை வைக்க முடியாது என்பதே காரணம்)

Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க

நாம் நமது கணினியில் டாக்குமெண்டுகள், புகைப்படங்கள், MP3 பாடலகள், வீடியோ க்ளிப் போன்ற பலவகையான கோப்புகளை வைத்திருப்போம். பல சமயங்களில் ஒரே கோப்பு உங்கள் வன் தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரைவ் மற்றும் ஃபோல்டர்களில் இருப்பதுண்டு. இதனால் உங்கள் வன் தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. 



இந்த பிரச்சனையை தீர்க்க பல கட்டணம் செலுத்த வேண்டிய மென்பொருட்கள் இருந்தாலும், ஒரு இலவச மென்பொருள் Duplicate Cleaner. வெறும்  3 எம்பி அளவுள்ள மிகவும் பயனுள்ள கருவி!. உங்கள் கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதன் Installation Wizard இல் Registry Reviver பகுதியில் Registry Cleaner தேவையில்லை என்றால், Do not Install Registry Reviver ஐ தேர்வு செய்து Install பொத்தானை அழுத்தி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

 

இந்த கருவியை இயக்கும் பொழுது, முதல் திரையில் எச்சரிக்கை செய்தியை வாசித்து, OK பொத்தானை அழுத்துங்கள்.


இப்பொழுது திறக்கும் Duplicate Cleaner திரையில், இடதுபுற பெட்டியில் தேவையான ட்ரைவ் மற்றும் கோப்புறைகளை தேர்வு செய்து அடுத்த பெட்டிக்கு ADD செய்து கொள்ளுங்கள்.


அடுத்து வலது புறமுள்ள File Search பகுதியில் உள்ள File Filter இல் கோப்பு வகையை கொடுங்கள் (Word கோப்பு எனில் *.DOC எனவும், படங்களுக்கு *.JPG.. )


பிறகு, கீழே உள்ள GO பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புகளின் அளவை பொறுத்து தேடும் வேகம் மாறுபடும்.


அடுத்த திரையில் தேடுதல் பணி முடிந்து விட்டதற்கான அறிவிப்பு வருவதை கவனிக்கலாம்.


இனி தேவையற்ற டூப்ளிகேட் கோப்புகளை கவனமாக தேர்வு செய்து கீழே உள்ள பொத்தான்களில் தேவையானதை க்ளிக் செய்து, டூப்ளிகேட் கோப்புகளை உங்கள் கணினியிலிருந்து நீக்கி, உங்கள் வன் தட்டினை பராமரிக்கலாம்.




உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க

இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள். 



ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.

இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு  இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide  செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.


இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.





அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,



தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.



முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க

Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். 




இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். உங்கள் பாதிக்கப்பட்ட கணினியை சோதிக்கும் கணினி வல்லுனர், புதிதாக இயங்குதளத்தை நிறுவினால்தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். என்று சொல்லும் நிலை கூட வரலாம். 

இது போன்ற சமயங்களில் நமக்கு சமய சஞ்சீவியாக அமைவது Kaspersky நிறுவனத்தின் இலவச Bootable Kaspersky Rescue Disk.


இந்த பயனுள்ள கருவி, ISO இமேஜ் கோப்பாக தரவிறக்க Kaspersky தளத்திலேயே கிடைக்கிறது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரபட்டுள்ளது). இந்த ISO கோப்பை தரவிறக்கம் (வைரஸ்/மால்வேர் அல்லாத கணினியில்) செய்து கொண்டு, Nero Burning Rom போன்ற CD/DVD Burning Software ஐ பயன் படுத்தி இந்த ISO Image லிருந்து, CD ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் இல்லாதவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து ImgBurn மென்பொருளை தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளுங்கள்.


இப்படி உருவாக்கிய Kaspersky Rescue Disk ஐ பாதிக்கப்பட்ட கணினியில், First Boot Device ஐ Bios Settings இல் CD/DVD க்கு  மாற்றிவிட்டு, இந்த CD ஐ கொண்டு பூட் செய்யுங்கள். திரையில் Kaspersky Rescue Disk. Graphic Mode என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பின்னர் இதில் தொடரும் விசார்டை பின் பற்றி உங்கள் வன்தட்டில் உள்ள வைரஸ்/மால்வேர்களை நீக்கி, உங்கள் கணினியை உயிர்ப்பிக்கலாம்.



இது போன்ற பிரச்சனைகள் உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் கூட, இந்த Rescue CD ஐ உருவாக்கி வைத்துக் கொள்வது, ஆபத்து நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.





Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி!

நாம் மைக்ரோசாப்ட் Excel பயன்பாட்டினை உபயோகித்து  பெரிய Worksheetகளை உருவாக்கும் பொழுது,  சில சமயங்களில் duplicate என்ட்ரிகள் வருவதை தவிர்க்க இயலாது. 1000 க்கும் மேற்பட்ட டேட்டாகளை கையாளும் பொழுது, இவ்வாறு வரும்  Duplicate Entry களை கண்டறிவது, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு காரியமாகும். 


இந்த வேலையை உங்களுக்கு எளிதாக்க பல மென்பொருள் கருவிகள் இருந்தாலும் அவை விலை கொடுத்து வாங்க வேண்டிய (குறைந்த பட்சம் 30 டாலர்கள்) சூழ்நிலை உள்ளது. இதோ உங்களுக்காக ஒரு இலவச மென்பொருள் நீட்சி! DuplicatesRemover v2.0 (தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்). 


இதை நிறுவிக் கொண்ட பிறகு Excel ஐ திறந்து பார்த்தால், Add-Ins ரிப்பன் மெனுவில் இந்த புதிய நீட்சிக்கான பட்டன் வந்திருப்பதை காணலாம். 


இப்பொழுது Duplicate ஐ கண்டறிவதற்கான எச்செல் கோப்பை திறந்து கொள்ளுங்கள். 


Duplicates Remover பொத்தானை அழுத்தவும். இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில், எந்த Column த்தில் உள்ள டேட்டாக்களில் Duplicate entry களை கண்டறிய வேண்டுமோ, அந்த column ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரே சமயத்தில் பல Column களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.  


உதாரணமாக Column B , தேர்வு செய்து அடுத்துள்ள Action பகுதியில் Delete Duplicates / Highlight Duplicates / sort data and highlight duplicates / move to bottom and highlight duplicates / examine for duplicates போன்ற வசதிகளில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள். 


அடுத்துள்ள Comparing Options பகுதியில் case sensitive / Trim White space ஆகிய வசதிகளில் உங்களுக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து கொண்டு, 



Start பொத்தானை அழுத்துங்கள்! அவ்வளவுதான்! நொடிகளில் உங்கள் கோப்பிலுள்ள Duplicate களை கண்டறிந்து தேவையை பூர்த்தி செய்கிறது. 


DuplicatesRemover தரவிறக்க! 

.

நண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது..

நீங்கள் உங்களது கணினியில் ஏதாவது முக்கியமான அல்லது இரகசியமான டாக்குமெண்டுகளை டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது, திடிரென வரும் உங்கள் நண்பர் 'ஒரு சில நிமிடங்கள் உங்கள் கணினியை பயன்படுத்திக் கொள்ளலாமா?' என்று கேட்கும் பொழுது உங்களால் மறுக்க முடியாது. உங்கள் டாக்குமெண்டுகளை மினிமைஸ் செய்து விட்டு  நண்பருக்கு உங்கள் கணினியை அல்லது மடிக்கணினியை கொடுக்கிறீர்கள்.


இந்த காலத்தில் எத்தனை நண்பர்கள் உண்மையானவர்களாக இருக்கிறார்கள்? நீங்கள் கொஞ்சம் அசந்தால் போதும் அவர், நீங்கள் மினிமைஸ் செய்து வைத்த டாக்குமெண்டை திறந்து பார்த்து, பின்னர் ஒன்றும் தெரியாதது போல உங்களிடம் கணினியை, அவரது பணி முடிந்து விட்டதாக கூறி ஒப்படைத்து விடுவார். ஆனால் பின்னாளில் அவர் வைக்கப் போகும் ஆப்பு!  இன்று அவர் உங்களை அறியாமல் பார்த்த அந்த குறிப்பிட்ட டாக்குமெண்ட் சம்பந்தமானதாக இருக்கலாம் யார் கண்டது? 

இது போன்ற சமயங்களில், நீங்கள் மினிமைஸ் செய்யாமல் அனைத்தையும் மூடிவிட்டு, உங்கள் நண்பருக்கு கொடுத்தால், அவர் உங்களை தவறாக நினைத்து விடுவாரோ? என்று வெள்ளந்தியாக யோசிப்பது புரிகிறது. சரி, இதற்கு சரியான தீர்வு LockThis! எனும் இலவச மென்பொருள் கருவி! 

இந்த மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, இதில் உள்ளிருப்பு கடவு சொல்லை மாற்ற வேண்டும். System tray யில் உள்ள இந்த LockThis! ஐகானை வலது க்ளிக் செய்து, Admin panel ஐ சொடுக்குங்கள். 


பிறகு கடவு சொல் கேட்கும் பொழுது LockThis! என்பதை கொடுங்கள். இதுதான் முதன் முதலாக இதை பயன்படுத்தும் பொழுது உள்ளிருக்கும் கடவு சொல். இதைத்தான் நாம் மாற்ற வேண்டும். இனி Admin panel லில் Change Admin Password பொத்தானை சொடுக்கி புதிய கடவு சொல்லை கொடுக்கவும். 


இரண்டு முறை கடவு சொல்லை கொடுத்து OK பட்டனை சொடுக்கிய பின்னர் வரும் சிறு வசனப் பெட்டியில் OK பட்டனை சொடுக்கி புதிய கடவு சொல்லைactivate செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்! இனி உங்கள் நண்பருக்கு கணினியை கொடுக்கும்பொழுது, உங்கள் டாக்குமெண்டை கண்ட்ரோல் கீயை அழுத்திய படி Minimize பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது. 


மறுபடி கடவு சொல் கொடுத்துதான் திறக்க முடியும்! 

விண்டோஸிற்க்கான அருமையான காலண்டர் கருவி!

விண்டோஸ் Vista/7 இயங்குதளங்களில் உள்ளது போன்று, Calendar Gadget விண்டோஸ் எக்ஸ்பியில் இல்லை. இதனை ஈடு செய்ய பல கருவிகள் இருந்தாலும், Rainlendar Lite  எனும் இலவச (இதன் Pro Version ஐ பணம் செலுத்தி வாங்க வேண்டும்) மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)



இந்த Gadget உடன் Events மற்றும் To Do: ஆகிய இரண்டு வசதிகளும் இருப்பது சிறப்பு. இதனை டெஸ்க்டாப்பில் தேவையான பகுதிக்கு நகர்த்திக் கொள்ளலாம். மேலும் இதனை வலது க்ளிக் செய்து, New Event மற்றும் New Task ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.



தேவையான சமயத்தில் நோட்டிபிகேஷன், அலாரம் ஆகிய வசதிகளும் நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.


Event மற்றும் Task கள் டாஸ்க் பாரில் பலூன் அறிவிப்புகளாக தெரியும்.


இந்த காலண்டரின் தோற்றம் மற்றும் opacity ஆகியவற்றை வலது க்ளிக் செய்து Options பகுதிக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும்.  இவற்றில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் கட்டளைகளை ஒவ்வொரு டேபிளும் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது. 


இதை மிகவும் எளிதாக்க ஆபீஸ் 2010 பதிப்பில் Customize the Ribbon எனும் புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் வோர்ட் இல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். 
ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்யவும். 



 அடுத்து திறக்கும் Word Options திரையில் வலது புற டேபில் கீழே உள்ள New Tab என்ற பொத்தானை சொடுக்கவும். 


 அடுத்து திறக்கும் Rename உரையாடல் பெட்டியில் புதிதாக உருவாக்கபோகும் தேவையான டேபிற்கான பெயரை கொடுக்கவும். 

இனி வலதுபுற Customize the Ribbon பகுதியில் புதிதாக உருவாக்கிய டேபை தேர்வு செய்து கொண்டு, இடது புற Choose commands from பகுதியிலிருந்து தேவையான கட்டளைகளை தேர்வு செய்து Add பொத்தானை பயன்படுத்தி இணைத்துக் கொண்டு OK பொத்தானை சொடுக்கவும். 


இந்த முறையில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளை இந்த புதிய டேபில் உருவாக்கிக் கொண்டு நமது பணியை விரைவாக செய்ய முடியும். 


இதே போன்று எக்சல், பவர் பாயிண்ட் போன்ற பயன்பாடுகளிலும் உருவாக்கி வைத்து பயன் பெறலாம். 

மேலும், இப்படி உருவாக்கிய வசதியை அந்த குறிப்பிட்ட கணினி அல்லாத பிற கணினிகளில் பயன்படுத்தும் வகையாக, இந்த மாற்றங்களை,  ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்து, Word Options திரைக்கு சென்று, வலது புற பேனில் கீழ்  புறமுள்ள, Import/Export க்ளிக் செய்து Export all Customizations தேர்வு செய்து, Export செய்யவும், இந்த export செய்த கோப்பை தேவையான மற்ற கணினியில், Import Customization file தேர்வு செய்து Import செய்து கொள்ளவும் முடியும் என்பது இதன் தனி சிறப்பு. 

Microsoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி!

Microsoft word தொகுப்பில் "Latha" தமிழ் எழுத்துருவை அனைவரும் முயற்சி செய்து பார்த்திருப்போம்.. பலரும் தோற்றிருப்போம்.. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை  பொருத்தமட்டில், தமிழில் உள்ளீடு செய்வதற்கு  எ-கலப்பை, குறள், அழகி, NHM Writer போன்ற பல கருவிகள் இருந்தாலும், (NHM -இல் வேர்டு தொகுப்பில் முயன்ற பொழுது லதா எழுத்துரு ஒரு சில சமயங்களில் பெட்டி பெட்டியாகத்தான் வந்தது) ஒருங்குறி (யுனிகோட்) முறையில் வேர்டு தொகுப்பில் "லதா" எழுத்துருவை பயன்படுத்தி நமக்கு தேவையான தமிழ் கோப்புகளை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச  Microsoft Indic Language Input Tool மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 


  
(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த தளத்திற்கு சென்று, Install Desktop Version ஐ க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

மேலும் உங்களது இயங்குதளத்திற்கு (விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா / ஏழு) ஏற்ப இந்த வசதியை எப்படி உருவாக்குவது என்பது இந்த தளத்திலேயே விரிவாக, விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளதால் நான் அதை இங்கு விளக்கவில்லை) 

இந்த கருவியை நிறுவி, உங்கள் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்த பிறகு, Language Tool bar இல் தமிழ் வந்திருப்பதை கவனிக்கலாம். இனி வேர்டில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு முன்பாக இதனை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.





இனி தட்டச்சு செய்யும் பொழுது, வார்த்தைகளை முடிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட பிற வார்த்தைகள் Context menu வில் தோன்றுவதை கவனிக்கலாம்.


லதா எழுத்துருவில் எளிதாக தட்டச்சு செய்ய முடிகிறது.



Antivirus

எனது கணினியில் வழக்கமாக Kaspersky Internet Security, (அதுவும் முறையாக உரிமம் பெற்ற) நிறுவப்பட்டிருக்கும். இதன் காரணமாக பெரும்பாலான வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து தப்ப முடிந்தது. இதன் காரணமாகவே எனது வாடிக்கையாளர்களுக்கும் இந்த Antivirus தொகுப்பையே பயன்படுத்தும்படி சொல்லி வந்தேன். 


சென்ற வாரம் திங்களன்று, எனது கணினியில் Kaspersky 2010 உரிமத்தின் காலம் நிறைவடைந்து விட்டது. 15 நாட்களுக்கு முன்னரே தொடர்ந்து அறிவிப்பு வந்துக் கொண்டிருந்தாலும், கைவசமே புதிய Kaspersky 2011 உரிமத்துடன் இருந்தாலும் ஏதோ ஒரு கவனக் குறைவினால், அதனை புதுப்பிக்காமல் தவற விட்டுவிட்டேன்.


பிறகு எனது வன்தட்டில் F ட்ரைவை திறந்து பார்க்கையில், Recycler ஃபோல்டர் உருவாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


'ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது!' என யோசித்தபடி, அதன் விவரங்களை சேகரித்தபோது, மேலும் அதிர்ச்சிதான். W32.Lecna.H worm வகையை சேர்ந்த இந்த வைரஸ் விண்டோசில் உள்ள Autorun வசதியை பயன்படுத்தி அனைத்து ட்ரைவ்களிலும் Recycler என்ற அழிக்க முடியாத hidden folder ஐயும், AutoRun.inf ஐயும் நிரந்தரமாக உருவாக்கி, தனது தாக்குதல்களை துவங்குகிறது.

மேலும் இது ஒவ்வொருமுறை கணினியை துவக்கும் பொழுதும் Windows Registry ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருப்பதால், பாதிக்கப்பட்ட எந்த ஒரு ட்ரைவையும் Format செய்தாலும் பயனில்லை, இதன் பாதிப்பு தொடரும் என்பது கொடுமையான விஷயம்.

இதன் தாக்குதலுக்கு உள்ளான கணினியின் இயல்பான வேகம் குறைந்திருப்பதை கண்டறிய முடியும். ஒரு சில கணினியில் Folder option வசதியும் முடுக்கப்படுவதால் Hidden Folder களை காணமுடியாத நிலையம் ஏற்படுகிறது.  மிக முக்கியமாக இணையத்தில் உலாவும்போழுது, தானாகவே கெடுதல் விளைவிக்கும் வலைப்பக்கங்களுக்கு சென்று, மால்வேர்களை தரவிறக்கிக் கொள்கிறது. இது மெதுவாக உங்கள் தனிப்பட்ட விவரங்கள் (மின்னஞ்சல்  கணக்கின் கடவு சொல் மற்றும் விவரங்கள், வங்கி தொடர்பான விவரங்கள்)   அனைத்தையும் களவாடிய பிறகு ஒரு நல்ல நாளில் உங்கள் இணைய கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் அபாயம் குறித்து பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

எனக்குத்தான் மோசமான முன் அனுபவம் இருப்பதால், உடனடியாக உஷாராகி, Kaspersky 2011 ஐ நிறுவத் தொடங்கினேன். ஏற்கனவே காலாவதியான Kaspersky 2010 ஐ நீக்கிவிடவா? என்று கேட்ட பொழுது, சரியென்று பொத்தானை சொடுக்கியது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிறகுதான் புரிந்தது. பேசாமல் 2011 இன்   License Key ஐ பயன்படுத்தி Kaspersky 2010 ஐ புதுப்பிக்காமல் போனது என்னுடைய முட்டாள்தனம்.

ரீ ஸ்டார்ட் ஆகி மறுபடி விண்டோஸ் துவங்கிய உடன், டாஸ்க்பாரில் தொடர்ந்து, Regsvr.exe தாக்கப்பட்ட அறிவிப்பு அலாரம் அடித்தது. (அப்ப சைக்கிள்ள வந்தது சைத்தான் தான்) NewFolder.exe என்றும் அழைக்கப்படும் இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது, டாஸ்க் மேனேஜர், registry முடக்கப்படும்,    கணினியின் வேகம் முற்றிலுமாக குறைந்து விடும்.

ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து பார்க்க, ஒவ்வொன்றினுள்ளும், அதே பெயரில் மற்றொரு ஃபோல்டர் உருவில் சைத்தான் அமர்ந்திருக்க..  Kaspersky 2011 ஐயும் நிறுவமுடியாமல் போக.. டென்ஷனாகி.. நேரடியாக UPS ஐ அனைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.

இந்த பிரச்சனையை Format செய்யாமல் தீர்வு காணவேண்டுமென்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டேன்..

விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி

விண்டோஸ் இயங்குதளத்தை  உபயோகிக்கும் பயனாளிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் NirCmd எனும் ஒரு சிறிய இலவச Command Line Utility ஐ குறித்து ஒரு விளக்கம். 


நமது கணினியில் அல்லது மடிக்கணினியில் உள்ள DVD ட்ரைவை திறக்க / மூட, வால்யூமை மியூட் செய்ய  மற்றும் சத்தத்தை கூட்ட, குறைக்க, மானிட்டரை அணைக்க, ஸ்கிரீன் சேவரை துவக்க, Logoff செய்ய Standby mode இற்கு செல்ல, கணினியை அணைக்க, திறந்துள்ள அனைத்து இன்டர்நெட் Explorer விண்டோக்களை ஒரே நொடியில் மூட, என 50 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய செயல்களுக்கான டெஸ்க்டாப்  ஷார்ட்கட்களை  உருவாக்க இந்த NirCmd கருவி பயன்படுகிறது. (தரவிறக்கவும், இதன் மேலதிக பயன்பாட்டின் பட்டியலை காணவும்  சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)      

உதாரணமாக இந்த கருவியை பயன்படுத்தி நமது கணினியில் இணைக்கப்பட்டுள்ள CD /DVD ட்ரைவை Eject செய்ய ஒரு ஷார்ட்கட்டை உருவாக்குவது எப்படி என்பதை காணலாம். முதலில் கீழே தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து NirCmd கருவியை உங்கள் வன்தட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக D:\)

இப்பொழுது  Desktop இல் வலது க்ளிக் செய்து, திறக்கும் Context மெனுவில் New மற்றும் Shortcut ஐ க்ளிக் செய்யுங்கள்.      


அடுத்து திறக்கும் விசார்ட்டில்  Type the Location of the Item என்பதற்கு நேராக, D:\nircmd.exe cdrom open F: என டைப் செய்து Next பட்டனை சொடுக்குங்கள். (D:\ என்பது NirCmd.exe கோப்பை நமது கணினியில் சேமித்து வைத்திருக்கும் லொகேஷனை குறிக்கும், F: என்பது CD/DVD ட்ரைவை குறிக்கும், உங்கள் கணினிக்கு தகுந்தவாறு இவற்றை மாற்றிக் கொள்ளவும்).


  அடுத்து திறக்கும் உரையாடல் பெட்டியில், ஷாட்கட்டிற்கான பெயராக Eject CD/DVD என தட்டச்சு செய்து Wizard ஐ முடித்து, உருவாக்கிக் கொள்ளலாம். அடுத்து இதனை வலது க்ளிக் செய்து Prperties சென்று,  இந்த ஷார்ட்கட்டிற்கு தகுந்த ஐகானை நமது விருப்பத்திற்கு ஏற்ற படி உருவாக்கிக் கொள்வதோடு, சுருக்கு விசையையும் உருவாக்கி கொள்ளலாம். 


இதே வழிமுறையில் CD/DVD ட்ரைவை Close செய்ய,  Cdrom open f: என்பதற்கு பதிலாக CdRom Close f: என மற்றொரு ஷார்ட் கட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். 


இந்த NirCmd கருவியில் உள்ள 50 க்கும்  பிற கட்டளைகளை காணவும், தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.

.